பிரான்ஸில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டு முறை மேலும் நீடிப்பு!

பிரான்சில் கோவிட் சுகாதார பாஸ் பயன்பாட்டு முறை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அரசின் செய்தித்தொடர்பாளரான நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய,நவம்பர் மாதம் 15ஆம் திகதி வரை கோவிட் சுகாதார பாஸ் பயன்பாடு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்துள்ளார். கோவிட் ஆலோசனை அமைப்பின் ஆலோசனையைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கோவிட் தொற்றுக்கு குளிர்காலம் பிடிக்கும் என்பது நமக்குத் தெரியும் என்றும், குளிர்ந்த சீதோஷ்ணம் நெருங்கி வருகிறது. ஆகவே, நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இருந்தாலும், கோவிட் ஆலோசனை அமைப்பு, கோவிட் பாஸ் தொடர்பான விதிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் குறைக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது. அதன்படி, உணவகங்களில் வெளியே அமர்ந்து உண்ணும்போது பாஸ் தேவையில்லை, ஆனால், உணவகத்துக்குள் அமர்ந்து உணவு உண்ணுவதற்கு கோவிட் பாஸ் தேவை என்பது போன்ற விதி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews