இலங்கையின் மனித உரிமை நிலவரம் மிகவும் மோசம்: விசேட அறிக்கையாளர் –

இலங்கையின் மனித உரிமை நிலவரம், கடந்த 18 மாதங்களில் மிகவும் மோசமடைந்திருப்பதாக, ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, இழப்பீடுகள் மற்றும் மீள இடம் பெறாமையை உறுதிப்படுத்தல் தொடர்பான விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி தெரிவித்துள்ளார்.
இலங்கை குறித்த தமது அறிக்கையை, மனித உரிமைகள் பேரவையினது 48 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பித்து உரையாற்றுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
இலங்கையில், உண்மை மற்றும் நீதியைத் தேடுவதற்கான நடவடிக்கைகள் போதிய அளவு முன்னெடுக்கப்படவில்லை.
கடந்த 18 மாதங்களில், மனித உரிமை நிலவரம் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது.
பொறுப்புக்கூறல் விடயங்களிலும் முன்னேற்றமில்லை.
இந்த விடயங்கள், நிலைமாறு கால நீதி வழங்கல் செயல் முறையையும் பாதித்துள்ளன.
என விசேட அறிக்கையாளர் ஃபெபியன் சல்வியொலி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அரசாங்கம் தமது பொறுப்புக்களை நடைமுறைப்படுத்த, சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என, ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews