நாட்டில் எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் பலர் பாதிப்பு! –

நாட்டில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு மேலதிகமாக எஸ்பகிலோசிஸ் என்ற பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 700 கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொவிட் அசோசியேடட் பெல்மனரி எஸ்பகிலோசிஸ் என்ற பெயரில் அடையாளம் காணப்படும் இந்த நோய் கடந்த ஏப்ரல் முதல் நாட்டில் பரவி வருவதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பூஞ்சை தொற்று தொடர்பான விசேட வைத்தியர் ப்ரிமாலி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 12 கொவிட் தொற்றாளர்கள் மாத்திரமே இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews