பிரதேச சபை உறுப்பினர் விபத்துக்குள்ளானார்! –

வலப்பனை பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி பயணித்த பாரவூர்தியும், இராகலையிலிருந்து வலப்பனை பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிலும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வலப்பனை பிரதேச சபையின் மாகுடுகலை வட்டார உறுப்பினர் ஒருவர் பலத்த காயங்களுக்கு இலக்கான நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராகலை பொலிசார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் இராகலை பொலிசார் லொரியின் சாரதியை கைது செய்துள்ளதுடன், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிள் மற்றும் பாரவூர்தியை கைப்பற்றியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews