சீனாவிடமிருந்து மேலுமொரு தொகுதி தடுப்பூசிகள்…!

சீனாவிடமிருந்து இதுவரை 3 மில். இலவச டோஸ்கள் உள்ளிட்ட 22 மில். டோஸ் Sinopharm கிடைத்துள்ளன

சீனா ஒரு மில்லியன் டோஸ் Sinovac கொவிட்-19 தடுப்பூசி டோஸ்களை இலங்கைக்கு வழங்க முடிவு செய்துள்ளது.

இலங்கையின் தடுப்பூசி திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் அன்பளிப்பாக இதனை வழங்கவுள்ளதாக, ட்விற்றர் பதிவொன்றை இட்டுள்ள இலங்கையிலுள்ள சீனத் தூதரகம் இதனை அறிவித்துள்ளது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews