கல்முனை பிரதேசம் முற்றாக முடங்கியது! –

கல்முனை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய கிராமங்களில் ஊரடங்குச் சட்டத்தினால் அங்குள்ளவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன.கல்முனை பொலிஸ பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு, மருதமுனை ஆகிய கிராமங்களில் ஊரடங்குச் சட்டத்தினால் அங்குள்ள வீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இங்குள்ள பாண்டிருப்பு,மருதமுனை ஆகிய கிராமங்களின்பிரதானவீதிகள் மற்றும் உள்வீதிகளில் இராணவத்தினரும், பொலிஸாரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் பயணக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படும் நபர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு அனுப்பப்பட்டும் வருகின்றனர்.

வீதிகளில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனைசெய்யும் வியாபாரிகளையும்,மருந்தகங்களையும் தவிர அநாவசியப்பயணங்களை மேற்கொள்ளும் எவரையும் காண முடியவில்லை. அரசாங்கத்தின் ஊரடங்குசட்டத்திற்கு இப் பிரதேசங்களிலுள்ள மக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews