மேலும் 80,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்தன |

– மேலும் ஒரு மில்லியன் Sinopharm டோஸ்கள் நாளை வரவுள்ளன

– இன்றையதினம் நாடு முழுவதும் 124 தடுப்பூசி மையங்கள்

இலங்கையின் தடுப்பூசி திட்டத்திற்காக இன்று (23) காலை சுமார் அமெரிக்க தயாரிப்பு 80,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இத்தடுப்பூசி தொகுதியானது, நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கட்டாரின் டோஹாவிற்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் கட்டார் எயார்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

இதேவேளை மேலும் ஒரு மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் நாளை (24) இலங்கையை வந்தடையவுள்ளன.

இலங்கைக்கு இதுவரை மொத்தமாக 14.7 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப் பெற்றுள்ளதோடு, இம்மாத இறுதிக்குள் மேலும் 3 மில்லியன் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு மில்லியன் நாளை (24) வரவுள்ளதாகவும் கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை (21)  வரை இலங்கையர்களுக்கு 13.98 மில்லியன் டோஸ் Sinopharm தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சீனத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றையதினம் (23) நாடு முழுவதும் 19 மாவட்டங்களில் 124 மையங்களில் தடுப்பூசி வழங்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews