தங்கத்தின் விலையில் சரிவு…!

தங்கத்தின் விலை தற்போது சரிவில் உள்ளதாகவும் மேலும் அதன் விலைக் குறைய வாய்ப்புள்ளதாகவும் வர்த்தக நிபுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்கத்தின் விலையானது கடந்த வாரத் தொடக்கத்தில் ஏற்றம் காணுவது போல் இருந்தாலும், பிற்பாதியில் தங்கம் விலையானது சரிவினைக் கண்டுள்ளது.
இந்த நிலைமை எதிர்வரும் வாரத்திலும் சற்று சரிவினைக் காணும் விதமாகவே காணப்படுகிறது.
இதனிடையே தங்கத்தின் விலை இன்னும் குறைந்தால், எவ்வளவு குறையும்? எப்போது வாங்கலாம் என பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.
தங்கத்தின் விலையானது கடந்த வாரத்தில் இருந்து சில நாட்களாகவே தடுமாற்றத்தில் இருந்து வருகின்றது.
இது எதிர்வரும் வாரத்திலும் சற்று சரிவை காணலாம் என்று கருதப்படுகின்றது.
இது டொலரின் மதிப்பு மீண்டும் ஏற்றம் கண்டுவரும் நிலையில், தங்கம் விலை இன்னும் சரிவை காணலாம் என்ற நிலையே இருந்து வருகின்றது.
கடந்த சில வாரங்களாகவே அமெரிக்காவில் வேலையின்மை நலன் குறித்த தரவானது, சந்தைக்கு சாதகமாகவே வந்து கொண்டுள்ளது.
இதுவும் டொலருக்கு சாதகமாக வந்துள்ளது.
இது அமெரிக்க பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளதையே காட்டுகின்றது.
இதுவும் சந்தைக்கு சாதகமான விடயமாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் பத்திர சந்தையானது தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ள நிலையில், இதுவும் சந்தைக்கு சாதகமான விடயமாகவே பார்க்கப்படுகிறது.
இதனால் பத்திர சந்தையானது மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.
இது டொலருக்கு உகந்த விடயமாகவே பார்க்கப்படுகிறது.
ஒரு புறம் அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பிக் கொண்டுள்ளது சாதகமான விடயமாக பார்க்கப்பட்டாலும், அமெரிக்காவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கமானது அச்சம் கொள்ளும் வகையில் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews