செல்வச் சந்நிதி ஆலய சூழலில் இருவருக்கு கொரோணா….!

தொண்டமனாறு – செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோட்சபம் ஆரம்பமாகவுள்ள நிலையில் சுகாதார முன்னாயத்த நடவடிக்கையாக ஆலய சுற்றாடலில் உள்ள கடை உரிமையாளர்கள் 36 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களுடன் தொடர்புகளை பேணியவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.  ஆலய சூழலில் உள்ள கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் திருவிழாவுக்கு முன்னர் பீ.சி.ஆர் பரிசோதனை எடுக்கவேண்டும் என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகரினால் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதனடிப்படையிலேயே நேற்று 36 பேரிடம் பிசிஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதேவேளை, ஆலயத்துடன் தொடர்புடைய 75 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 25 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு போதுமானதாக இல்லை என்று அறிக்கையிடப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews