வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – ராஜித

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்குள், வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இடதுகையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்ற நிலைமையே நாட்டில் தற்போது நீடித்து... Read more »

நெடுஞ்சாலை வாயில்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு.

அதிவேக நெடுஞ்சாலைகளில், அலுவலக நேரங்களில் வெளியேறும் வாயில்களுக்கு அருகில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக, புதிய மின்னணு கட்டண அறிவீட்டு கூடங்களை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலை செயற்பாட்டு முகாமைத்துவப் பிரிவின் முன்னேற்றம் மற்றும்... Read more »

இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானம்.

எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக, இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் தலையீட்டின் கீழ், கடனுதவியை விரைவில் பெற்றுக்கொள்ளவுள்ளதாக பெட்ரோலிய கூட்டுத்தாபன தலைவர், சட்டத்தரணி சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். கடனை பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையில் நாட்டின் எரிசக்தி அமைச்சு... Read more »

பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் விரைவில்.

கடந்த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக ஆணைக்குழுவின் பிரதி தலைவர், பேராசியர் சந்தன உடவத்த குறிப்பிட்டுள்ளார். இம்முறை... Read more »

அமைச்சர் மஹிந்தானந்தவின் கொடும்பாவி எரிப்பு.

இரசாயன உரத்தை விநியோகிக்கக் கோரியும், அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுவரெலியா விவசாய சங்கங்களும் பௌத்த குருமார்களும் இணைந்து, நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (17) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதுடன் எதிப்பு பேரணியையும் முன்னெடுத்தனர் . இதன்போது விவசாயத்துறை அமைச்சர்... Read more »

இன்றைய கடல் போராட்டத்தில் சுமந்திரன் அணி மட்டும் பங்கேற்பு?

இன்று முல்லைத்தீவு முதல் பருத்தித்துறை முனை வரை ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் சுமந்திரனின் ஆதரவாளர்களும் மீனவ சங்கப் பிரதிகளில் மாத்திரமே கலந்து கொண்டனர். ஏனைய அரசியற் கட்சி பிரதிநிதிகள் எவரும் குறித்த போராட்டத்திற்கு ஆதரவளிக்காதது மட்டுமல்லாது கலந்து கொள்ளவுமில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தக்கோரி முல்லைத்தீவில்... Read more »

மதுசாரம் மற்றும் சிகரட் பாவனையினால் நாட்டில் நாளாந்தம் 100 பேர் மரணம், ஆய்வில் அதிர்ச்சி தகவல்….???

மதுசாரம் மற்றும் சிகரட் பாவனையினால் எமது நாட்டில் நாளாந்தம் சராசரியாக 100 பேர் மரணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட ADIC Film Research நிறுவனம் இத் தகவலை வெளியிட்டுள்ளது. கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் வெளியான தமிழ்... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளி கந்தன்குளத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்…!

ஓம் சக்திவேல் ஜயாவின்  கோரிக்கையின் பேரில்  இலங்கை இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில்  செல்வசந்நிதியான் ஆச்சிரம முதல்வர் தவத்திரு மோகனதாஸ் சுவாமிகளால் கற்றல் உபகரணங்கள் நேற்று 15/10/2021 வழங்கிவைக்கப்பட்டுள்ளது . நவராத்திரி தினத்தின் இறுதிநாளான விஜயதசமியாகிய நேற்று பூசைகளை  தொடர்ந்தே  ஓம் சக்திவேல் அறநெறி... Read more »

புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளராக நாகப்பர் கந்ததாசன் நியமனம்….!

புதிதாக உருவாக்கப்பட்ட கிளிநொச்சி வடக்கு வலயத்தின் பணிப்பாளராக நாகப்பர்  கந்ததாசன் கடந்த 12/01/2021 அன்று தனது பதவியை ஏற்றுக் கொண்டார். இலங்கையின் 100 ஆவது கல்வி  வலயமாகவும், வடக்கு மாகாணத்தில் 13 ஆவது கல்வி வலயமாகவும், புதிதாக  உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் கிளிநொச்சி வலயக்கல்வி... Read more »

நாளைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு மீனவ அமைப்புக்களுக்கு தொடர்பு இல்லை….நா.வர்ணகுலசிங்கம்.

நாளைய தினம் மீனவர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள  இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் அவர்கள் இதுவரை மீனவ அமைப்புகளுடனத எந்தவிதமான தொடர்புகளையும்  ஏற்படுத்தவில்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர்  சமூகத்தின் நா.வர்ணகுலசிங்கம்... Read more »