நாளைய தினம் இடம்பெறவுள்ள போராட்டத்திற்க்கு மீனவ அமைப்புக்களுக்கு தொடர்பு இல்லை….நா.வர்ணகுலசிங்கம்.

நாளைய தினம் மீனவர் போராட்டம் ஒன்றை மேற்கொள்ள  இருக்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் அவர்கள் இதுவரை மீனவ அமைப்புகளுடனத எந்தவிதமான தொடர்புகளையும்  ஏற்படுத்தவில்லை என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளன உப தலைவர்  சமூகத்தின் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

நாளை தினம் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்தரனால் மேற்கொள்ளவிருக்கின்ற போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது நாளைய தினம் இடம் பெறவுள்ள போராட்டம்  அவரது தனிப்பட்ட நோக்கங்களுகதகானது என்றும்,
இந்த மீனவ போராட்டத்திற்கு ஆதரவும் இல்லை. எதிர்ப்பும் இல்லை என்றும்,  பல்வேறு வடிவங்களில் அவர் போராட்டங்களை செய்யலாம்.  அது அவருடைய அரசியலுக்கானது  என்றும்,  எங்களுடைய கடற்தொழில் சங்கங்கள் சார்ந்த பிரச்சினைகளே அணுகியே மேற்கொள்ள வேண்டும் என்றும்,  நாங்கள் எந்த அரசியல்வாதிகளையும் வெறுக்கவில்லை என்றும்.

எமது பிரச்சனை என்றால்  எங்களோடு கலந்தாலோசித்தே மேறகொள்ள. வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்தில் 117 கடற்தொழிலாளர் சங்கங்கள் உண்டு .  11 சமாசங்கள் மற்றும் சம்மேளனம் என்பன  இருக்கின்றபோதும் இந்த பிரச்சினை தொடர்பில் அவர் எ தடனும்  உரையாடவிலளை என்றும், தெரிவித்ததுடன் மேலும் மீனவர்களுடைய பிரச்சினை ஒருபோதும் பகடைக்காயாக பயன்படுத்த வேண்டாம் என்றும்,  மீனவர் பிரச்சனையை மீனவர்களுடன் சேர்ந்தே  மேற்கொள்ள வேண்டும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews