வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – ராஜித

இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் நிறைவடைவதற்குள், வறுமை கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இடதுகையால் கொடுப்பது வலது கைக்கு தெரியாது என்ற நிலைமையே நாட்டில் தற்போது நீடித்து வருகின்றது. இந்த நாடு இன்று இறுதிகட்ட வங்ரோத்து நிலைமையை அடைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் 11.7 வீதமானோர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர். நாட்டை ஆட்சிய செய்த ஒவ்வொரு அரசாங்கங்களிலும் வறுமைகோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் தொகை காணப்பட்டது. நூற்று 04, 05 சதவீதங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்கள் காணப்பட்டனர். எனினும் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் கடப்பதற்கு முன்பு வறுமைக்கோட்டுக் கீழ் வாழுவோரின் எண்ணிக்கை 11.7 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதாவது இந்த சமூகத்தில், புதிததாக 7 சதவீமானோர் வறுமைகோட்டுக்குள் தள்ளப்பட்டுள்ளனர். நல்ல நிலையில் வாழ்ந்த மக்களை வறுமைகோட்டுக்குக் கீழ் வாழும் மக்களாக இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது.   ஒன்றறை வருடங்களுக்குள் 7 சதவீதமானோரை வறுமைகோட்டுக்குகள் தள்ளிய அரசாங்கத்தை உலகில் வேறு எந்த நாடுகளிலும் நாம் பார்க்கவில்லை.

சுபீட்சமான நாடாக இந்த நாட்டை மாற்றுவதற்காக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் வறியவர்களையும் யாசகர்களையும் உருவாக்கும் நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளது.

எமது நாட்டில் ஒரு சதம் எத்தனை காணப்பட்டாலும் அந்த சதத்தால் எந்த பிரயோசனமும் இல்லை. வெளிநாடுகளிலிந்து பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலரே எமக்கு தேவைப்படுகின்றது. வெளிநாடுகளில் உண்ணும் உணவு, ஆடைகள், அத்தியாவசிய மருந்துகள், உரம், உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் கொண்டுவருவதற்கு அந்நிய செலாவனி தேவைப்படுகிறது. டொலர் தேவைப்படுகிறது. டொலரை ஒரு சதத்துக்கு வாங்க முடியாது. வெளிநாட்டு இருப்பே எமது நாட்டில் பெறுமதிவாயந்தது ஒன்றாகக் காணப்படுகின்றது.

அந்த வெளிநாட்டு இருப்புக்கு என்ன ஆகியுள்ளது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக மத்திய வங்கியின்; டொலர் இருப்பு நேர்மறை பெறுமதிக்கு சென்றுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews