சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளி கந்தன்குளத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்…!

ஓம் சக்திவேல் ஜயாவின்  கோரிக்கையின் பேரில்  இலங்கை இந்துசமயத் தொண்டர் சபையின் ஏற்பாட்டில்  செல்வசந்நிதியான் ஆச்சிரம முதல்வர் தவத்திரு மோகனதாஸ் சுவாமிகளால் கற்றல் உபகரணங்கள் நேற்று 15/10/2021 வழங்கிவைக்கப்பட்டுள்ளது .

நவராத்திரி தினத்தின் இறுதிநாளான விஜயதசமியாகிய நேற்று பூசைகளை  தொடர்ந்தே  ஓம் சக்திவேல் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு இக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் இலங்கை முதலுதவி சங்க ஆணையாளர் திரு மோகனதாஸ், கிளிநொச்சி மாவட்ட பணிப்பாளர் திரு ஜெகதாஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews