மதுசாரம் மற்றும் சிகரட் பாவனையினால் நாட்டில் நாளாந்தம் 100 பேர் மரணம், ஆய்வில் அதிர்ச்சி தகவல்….???

மதுசாரம் மற்றும் சிகரட் பாவனையினால் எமது நாட்டில் நாளாந்தம் சராசரியாக 100 பேர் மரணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட ADIC Film Research நிறுவனம் இத் தகவலை வெளியிட்டுள்ளது.
கொவிட் 19 காரணமாக நாடு முடக்கப்பட்ட காலப்பகுதியில் வெளியான தமிழ் திரைப்படங்களின் மதுசார, சிகரட் மற்றும் ஏனைய போதைப்பொருள் வகைகளின் விளம்பரங்கள் தொடர்பான ஆய்வுகளிலிருந்தே இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
மதுசாரம் மற்றும் சிகரட் பாவனையினால் நாட்டில் நாளாந்தம் சராசரியாக 100 பேர் மரணிப்பதோடு பல்வேறு பிரச்சினைகளுக்கு மூலகாரணியாகவும் மதுசாரம், சிகரட் மற்றும் ஏனைய போதைப்பொருள் பாவனை அமைகின்றன என்றும்,  இவ்வாறு மரணிக்கும் ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கு பதிலாக மதுசாரம் மற்றும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து பல விளம்பரங்களை மேற்கொள்கின்றனர் என்றும்,
உலகளாவிய ரீதியில் சிகரட் மற்றும் மதுசார பாவனை குறைந்து வருகின்ற சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களின் இலாபத்தை தக்க வைத்துக்கொள்வதற்காக புதிதாக சிறுவர்களை பாவனைக்கு ஆளாக்குவதற்காகவும், பாவனையை அதிகரிப்பதற்காகவும், குறிப்பிட்ட நிறுவனங்களால் பல்வேறு விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பிரதானமாக திரைப்படங்களில் அதிகமான மதுசாரம், சிகரட் மற்றும் ஏனைய போதைப்பொருள் வகைகளின் விளம்பரங்களை மேற்கொள்ளப்படுகின்றது என்றும், அதிலும் தமிழ்த்திரைப்படங்களில் கவர்ச்சிகரமான முறையில் இவ்விளம்பரங்களை மேற்கொண்டு வருவதும்  ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.
இதே வேளை அதிகமான விளம்பரங்கள் ஆங்கில திரைப்படங்களில்,   சிங்கள மொழி திரைப்படங்களில் இடம்பெறுகின்றன என்றும் ADIC Film Research நிறுவன ஆய்வு முடிவுகள் மேலும் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 2021 ஏப்ரல்; 01ம் திகதியிலிருந்து ஆகஸ்ட் 31ம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாடு முடக்கப்பட்டிருந்த வேளை, சிறுவர்களும், இளைஞர்களும் பிரதான ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களுடன் அதிகமாக இணைந்து அவர்களுடைய நேரத்தை செலவழித்தமை அவதானிக்கப்பட்டது.
இதனை மையமாக வைத்து குறிப்பிட்ட காலப்பகுதியில் பிள்ம் பீட் இணையத்தளத்தின் தகவலிற்கமைய இக்காலப்பகுதியில் வெளியான 16 தென்னிந்திய திரைப்படங்கள் இந்த ஆய்விற்குட்படுத்தப்பட்டன. கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக அதிகமான திரைப்படங்கள் திரையரங்குகளில்; திரையிடப்படவில்லை எனினும், திரைப்படங்கள் வெளியிடப்பட்டு இறுவெட்டுக்களாகவும், இணையத்தளங்களிலும் வெளியிடப்பட்டன.
குறிப்பிட்ட ஆய்வில் வெளியான திரைப்படம், விளம்பரப்படுத்திய போதைப்பொருள் வகை, விளம்பரமாகிய நேர அளவு, விளம்பரப்படுத்தப்பட்ட விடயம், விளம்பரப்படுத்தபட்டிருந்த வழிமுறை, போன்றவை பிரதானமாக பகுப்பாய்வு செய்யப்பட்டது. ஆய்வின்  முடிவுகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews