“மாற்றுவழியின்றி அடிபணிந்த கோட்டாபய அரசாங்கம்.

விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து கோட்டாபய அரசாங்கம் இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது. அரசாங்கம் விவசாயிகளிடம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம்... Read more »

ஜெருசலேமில் துப்பாக்கிச்சூட்டினை நடாத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் மர்ம நபரொருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,3 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது. துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அதில்... Read more »

வான் கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கிய அமெரிக்க ஜனாதிபதி.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இந்த ஆண்டு ‘நன்றி தெரிவிக்கும் நாளை’ (Thanks giving) முன்னிட்டு 2 வான் கோழிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிகழ்வு வெள்ளை மாளிகையில் இடம்பெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அரசியல், சமூக,... Read more »

சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுத்திரருக்கவில்லை- அனந்தி சசிதரன்

சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களிற்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனவும் அறைகளிற்குள் விளக்கேற்றி படங்களை பிரசுரிப்பதை விடுத்து பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் நேற்று அவர் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தினை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும்... Read more »

கிளிநொச்சி டிப்போ சந்தியில் நேற்று பகல் இடத்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருவர் காயம்.

கிளிநொச்சி டிப்போ சந்தியில் நேற்று பகல் இடத்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பரந்தன் திசையிலிருந்து கிளிநொச்சி நகருக்குள் நுழைந்த கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து... Read more »

கிளிநொச்சி ஏ9 வீதியால் மோட்டார் சைக்கிளில்  சென்றவர்  திடீரென வீழ்ந்து மரணம்.

கிளிநொச்சி ஏ9 வீதியால் மோட்டார் சைக்கிளில்  சென்றவர்  திடீரென வீழ்ந்து மரணமடைந்துள்ளார். குறித்த சம்பவம் கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக நேற்று சுமார் இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இல 403 திருநகர் தெற்கைச் சேர்ந்த சின்னத்துரை ரஞ்சன் வயது (60) என்பவரே மரணமடைந்துள்ளார்.... Read more »

குடும்ப தகராறில் மனைவி உயிரிழப்பு! மனைவியை தீவைத்து கொழுத்திய சந்தேகத்தில் கணவன் கைது, யாழ்.பருத்தித்துறையில் சம்பவம்.. |

தீக்காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குடும்ப பெண் ஒருவர் நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பருத்தித்துறை – திக்கம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் பரமநாதன் சசிகலா (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த 13ம் திகதி... Read more »

வேலை நிறுத்த போராட்டத்தில் குதிக்கப்போகும் அரச ஊழியர்கள்! திகதி அறிவிக்கப்பட்டது.. |

2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்கள் புறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தொிவித்து எதிர்வரும் 29ம் திகதி நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.  மேற்படி அறிவிப்பை இலங்கை அரச அதிகாரிகளின் தொழிற்சங்க ஒன்றியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்துள்ள... Read more »

கால் போத்தலில் மதுபான விற்பனைக்கு முடிவு வருகிறது!

180 மில்லி லீற்றர் (கால்போத்தல்) மதுபான போத்தலை தடைசெய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்திருக்கின்றது. பாவனையின் பின்னர் சிறியளவான இந்த மதுபான போத்தல்கள் அளவில் சிறியது என்பதால் பெருமளவு சுற்றுச் சூழலுக்கு வீசப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2018ஆம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில்... Read more »

கத்தோலிக்கர்களின் நினைவு கூரும் மாதத்துக்குள் பொத்தாம் பொதுவான ஒரு நினைவு கூர்தலாக வகைப்படுத்தியதுதான் சர்ச்சைகளுக்கு காரணம்…! அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

2019 இலிருந்து கத்தோலிக்க திருச்சபையின் நான்கு தமிழ் ஆயர்களும் இணைந்து வடக்கு கிழக்கு கத்தோலிக்க ஆயர் மன்றம் என்ற பெயரில் ஓர் அணியாக செயல்பட்டு வருகிறார்கள். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அபிலாசைகளை அதிகம் பிரதிபலிக்கும் விதத்தில் இவ்வாறு தமிழ்ப்பகுதி ஆயர்கள் ஓரணியாக நிற்பது... Read more »