ஜெருசலேமில் துப்பாக்கிச்சூட்டினை நடாத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்ற பொலிஸார்.

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் மர்ம நபரொருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,3 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இன்று நடைபெற்றுள்ளது.

துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதன்போது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ப நபரை, இஸ்ரேல் பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews