“மாற்றுவழியின்றி அடிபணிந்த கோட்டாபய அரசாங்கம்.

விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து கோட்டாபய அரசாங்கம் இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது. அரசாங்கம் விவசாயிகளிடம் பாடம் கற்றுக்கொண்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியமை தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

அரசாங்கம் அநேக விடயங்களை மேலே பாய்ந்து கொண்டு ஆரம்பிக்கும் பின்னர் அந்த விடயங்களை வாபஸ் பெற்றுக்கொள்ளும். இரசாயன உரப் பயன்பாடு தடை குறித்து நாம் முன்கூட்டியே கூறியிருந்தோம். இதனை செய்ய வேண்டாம் என்றோம்.

எனினும் அரசாங்கம் அதற்கு செவி சாய்க்கவில்லை. விவசாயிகள் நடாத்திய கடுமையான போராட்டத்திற்கு அடி பணிந்து இன்று இரசாயன உர தடையை தளர்த்திக் கொண்டுள்ளது. இரசாயன உரம் என்பது உலகில் எல்லா நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது.

இந்த உரம் பற்றிய பொய்யான பிரச்சாரம் செய்து நடைமுறை ரீதியில் செய்ய முடியாதவற்றை அரசாங்கம் செய்ய முயற்சித்தது.

இரசாயன உர பயன்பாடு குறித்த தடையானது அரசாங்கத்தின் முட்டாள்தனத்தை பறைசாற்றிய மற்றுமொரு சந்தர்ப்பமாகும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews