கால் போத்தலில் மதுபான விற்பனைக்கு முடிவு வருகிறது!

180 மில்லி லீற்றர் (கால்போத்தல்) மதுபான போத்தலை தடைசெய்ய சுற்றாடல் அமைச்சு தீர்மானித்திருக்கின்றது.

பாவனையின் பின்னர் சிறியளவான இந்த மதுபான போத்தல்கள் அளவில் சிறியது என்பதால் பெருமளவு சுற்றுச் சூழலுக்கு வீசப்படுவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2018ஆம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 10 கோடி போத்தல்களுக்கும் அதிகமான போத்தல்கள் பயன்படுத்தப்பட்டதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளார்.

அதேபோன்று பயன்படுத்தப்பட்ட போத்தல்களில் நூறு வீதம் சுற்றுசூழலுக்கு வீசப்பட்டுள்ளது.

ஆகவே இந்த போத்தல்கள் மீள்சுழற்சி செய்யவொ அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் இந்த போத்தல்களை சேகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவது இல்லை என்பது தெரியவந்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews