
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி பிரதேசத்தில் 119 அவசர பிரிவுக்கு வந்த முறைப்பாடு தொடர்பாக குறித்த வீட்டிற்கு விசாரணைக்கு சென்ற பொலிசார் மீது ஒருவர் தாக்கியதில் இரு பொலிசார் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் தாக்குதலை மேற்கொண்டவர் தப்பி ஓடிய நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை... Read more »

கல்மடு விவசாயிகளிற்கு இரணைமடு குளத்தின் கீழ் 500 ஏக்கர் நெற்செய்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக செய்கை தொடர்பான கலந்துரையாடல் இரணைமடு விவசாய சம்மேளன மண்டபத்தில் இன்று இடம்பெற்றதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து... Read more »

நாவற்குழிப் பகுதியில் குடியிருப்புகளற்றுக் காணப்பட்ட வீதியோர காணிக்குள் புகைப்படக் கழிவுகளைக் கொட்டி எரித்த நிறுவனத்தினர் அந்தக் கழிவுகளை குழிவெட்டிப் புதைத்துள்ளனர். புகைப்பட ஸ்ரூடியோக் கழிவுகள் பெருமளவில் வாகனத்தில் கொண்டுவரப்பட்டு அந்தக் காணிக்குள் அண்மையில் எரிக்கப்பட்டன. குப்பையிலிருந்து எழுந்த புகையால் பாதிப்படைந்த அயலிலுள்ள இரு குடும்பங்கள்... Read more »

அச்சுவேலிப் பொலிஸ் நிலைத்துக்கு உற்பட்ட பகுதியில் பாலியல் நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை அச்சு வேலிப் பொலிசார் உரிய நேரத்தில் வைத்தியசாலையில் அனுமதிக்கவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாக அச்சுவேலி தென்மூலைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் வீட்டை விட்டு... Read more »

இலங்கையிலுள்ள 12 இலட்சம் நெற்செய்கையாளர்களுக்கும் மூன்று பயிர்ச்செய்கை காலங்களின் பின்னர் சேற்று உரத்தை இலவசமாக வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. எகிப்தில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட 36,000 மெட்ரிக் தொன் உரம் நேற்று (19) விவசாய அமைச்சிடம்... Read more »

உள்ளுராட்சி தேர்தல்களை தாமதிப்பது பொருத்தமற்றது என தெரிவித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மகிந்த தேசப்பிரிய 25 ம் திகதி தேர்தல் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு எனவும் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை உள்ளுராட்சி சபைகளின் காலம் முடிவடைவதால் தேர்தல்களை கூடிய விரைவில் நடத்துவது அவசியம் எனவும்... Read more »

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியவிளான் சந்தியில் நின்ற பெண் ஒருவரது தங்கச் சங்கிலி அறுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் குறித்த பெண் வீதியில் நின்ற வேளை அவ்வழியால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.... Read more »

மதமாற்ற சபை ஒன்று உடுவிலில் விளையாட்டு திடலில் மதமாற்ற முயற்சிக்கான கூட்டம் ஒன்றினை நடாத்துவதற்கு உரிமம் பெறுகிறதாக மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார். அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில், முதல்வர் சைவப் புலவர் பரமேசுவரன் கிறித்துவ... Read more »

மாகாண சபை முறைமையால் தமிழர்களுக்கு நன்மையென கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் உண்மையில், இது மலையக மக்களுக்கே நன்மை பயப்பதாக வடமாகாண சபை முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு யாழ். இந்திய துணைத்தூதரக அனுசரனையுடன், இலங்கை வாழ் இந்தியர்களின் 200வது வருட நினைவேந்தல்... Read more »

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்ற... Read more »