மாகாண சபை முறைமை குறித்து சிவஞானம் கருத்து…!

மாகாண சபை முறைமையால் தமிழர்களுக்கு நன்மையென கருத்துக்கள் வெளியிடப்பட்டாலும் உண்மையில், இது  மலையக மக்களுக்கே நன்மை பயப்பதாக வடமாகாண சபை முன்னாள் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு யாழ். இந்திய துணைத்தூதரக அனுசரனையுடன், இலங்கை வாழ் இந்தியர்களின் 200வது வருட நினைவேந்தல் உற்சவம் நேற்று ஸ்ரீதுர்க்கா மணி மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
மலையக மக்களின் கல்வி மேம்பாட்டை ஏற்படுத்துவதற்கு மாகாண சபை முறைமையால் வாய்ப்புகள் ஏற்படும்.
மாகாண சபை முறைமை என்பது தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டது என்ற கருத்துக்கள் வெளியிடப்படு வருகிறது, இதற்கு தமிழ்த்தேசிய பிரச்சனை காரணமாக அமைந்தது.
ஆனால், இது மலையக மக்களுக்கான சாதகமான நிலைமைகளை கொண்டுள்ளது, மலையக மாணவர்களை  கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்குவதாகவும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews