ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சி – சுரேஷ்

2024ஆம் ஆண்டில் முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்திய பின்னர் ஏனைய தேர்தல்களை நடத்துவதற்கே ஜனாதிபதி முயற்சித்து வருவதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகின்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒவ்வொரு உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்களை கொண்டு சபைகளை நடத்துவதற்கு பொதுஜன பெரமுன முயற்சிக்கிறது. இது சட்டவிரோதமானது.
உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் போது தவிசாளர்களின் பதவிகளும் இழக்கப்படும். அவ்வாறு பதவிகளை இழந்த பின்னர் தவிசாளர்களை கொண்டு சபைகளை இயக்க முடியாது.
தேர்தல்கள் தேவையில்லை என்றும் ஆனால் சபைகளின் தவிசாளர்கள் தொடர்ந்து செயற்படலாம் என பொதுஜன பெரமுன குறிப்பிடுவது ஜனநாயக விரேதமான செயற்பாடு – என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews