தனிநபர் சுமந்திரன் ரெலோவை வெளியேற்றுவது எவ்வாறு : சித்தார்த்தன் கேள்வி…!

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தனிநபர் சுமந்திரன் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவை எவ்வாறு வெளியேறுமாறு கூற முடியுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார். கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் ... Read more »

பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார்! ஜனாதிபதி கோட்டாபய அதிரடி அறிவிப்பு.

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற ஆளுங்கட்சி உறுப்பினர்களின் சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் தற்போது... Read more »

முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகேவின் வீட்டின் முன்னால் பதற்றம்.

முன்னாள் அமைச்சர் காமினி  லொக்குகேவின் வீட்டின் முன்னால் தற்போது பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. பிலியந்தலையில் உள்ள அவரது வீட்டின் முன்னால் பொதுமக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது அங்கிருந்த பேனர் ஒன்றினை ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்து எரித்து தமது எதிர்ப்பினை வெளியிட்டுவருவதாக... Read more »

40 நாள் உக்ரைன் போரில், ரஸ்யாவின் இராணுவ இழப்பு அதிகம்- இராணுவ பகுப்பாய்வு தளத்தின் கணிப்பீடு!

உக்ரைன் ஆக்கிரமிப்பு போரின் முதல் 40 நாட்களில் உக்ரைனை விட மூன்று மடங்கு அதிகமான இராணுவ தளபாடங்களை ரஸ்யா இழந்துள்ளது என்று இராணுவ பகுப்பாய்வு தளம் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட, கைவிடப்பட்ட அல்லது கைப்பற்றப்பட்ட கருவிகளின் காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்களை கோடிட்டு, ஒரிக்ஸ் என்ற... Read more »

மட்டக்களப்பை நோக்கி மாபெரும் மக்கள் போராட்டம்: பொலிஸார் குவிப்பு.

அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரை நோக்கி மாபெரும் மக்கள் போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக கோஷமெழுப்பியபடி பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுப்பெற்ற பின்னணியில் போராட்டத்தினை... Read more »

அரசில் இருந்து வெளியேறுகிறது சுதந்திர கட்சி.

அரசில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட  முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, லசந்த அலகியவன்ன, துமிந்த திசாநாயக்க, பிரியங்கர... Read more »

அரசுக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற மற்றுமொரு ஆர்ப்பாட்டம்.

நாட்டில் இடம்பெற்று வரும் அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான கோட்டாபய அரசின்  ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்  தற்போது கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more »

சமலின் வீடும் சுற்றிவளைப்பு!

திஸ்ஸமஹாராமவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டையும் இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல... Read more »

போராட்டத்தில் கலந்து கொள்ள முயற்சித்த பௌத்த தேரரரை ஆத்திரமடைந்து விரட்டிய பொதுமக்கள்.

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்ட  ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். பத்தரமுல்லே சீலரதன தேரர்,  பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள்... Read more »

அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் மகனது இல்லத்தின் முன்னால் போராட்டம்! உடன் தந்தையை அழைக்குமாறு தெரிவிப்பு.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஒரு சிறிய குழுவாக அங்கு கூடியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் மகனை அவரது தந்தையை வீட்டிற்கு அழைத்து வருமாறு அழைப்பு... Read more »