இந்தியாவிற்கு தப்பிச்சென்றதாக கூறப்படும் அரசியல்வாதிகள்! இந்திய உயர்ஸ்தானிகராலயம் தகவல்.

இலங்கையில் இருந்து சில அரசியல் பிரமுகர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்தியாவிற்கு தப்பிச் சென்றதாக பரப்பப்படும் செய்திகள் போலியானவை என கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது. Read more »

இறுக்கமடையும் கட்டுநாயக்க விமான நிலையம்! மகிந்த தரப்புக்கு இறுதி எச்சரிக்கை.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் செயலிழந்துள்ளதுடன், முழுமையாக மக்கள் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதாகவும், இதனை யாராலும் தடுக்க முடியாது எனவும் பொருளியல் முகாமைத்துவ முதுமானி பட்டதாரியும், இலங்கையில் இருக்கக்கூடிய பல நிறுவனங்களுக்கான முகாமைத்துவ நிதியியல் ஆலோசகருமான குருசுவாமி சுரேந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும்... Read more »

நீர்கொழும்பு பதற்றம் குறித்து அருட்தந்தை வெளியிட்ட தகவல்.

நீர்கொழும்பில் தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையினால் குறித்த பகுதியில் அமைதியின்மை நிலவுவதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது எனவும், எந்தவொரு தேவாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை என  நீர்கொழும்பு பொலவலனா பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்த விதான தெரிவித்துள்ளார். குறித்த பகுதிகளிலுள்ள தேவாலயங்கள் மீது முஸ்லிம்கள்... Read more »

உடன் பதவி விலகுங்கள் : கோட்டாபயவிடம் ஜே.வி. பி. இடித்துரைப்பு.

நாட்டின் தற்போதைய அரசியல் நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காண வழிவிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உடன் பதவி விலக வேண்டும் என ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தமது கட்சியின் யோசனைகள்... Read more »

யாழில் அங்கஜனின் அலுவலகம் தீவைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய்யில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அலுவலகமும் போராட்டகாரர்களால் தீவைக்கப்பட்டுள்ளது.   நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக கடந்த ஒரு மாத காலமாக அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்று முன் தினம் போராட்டத்தில் குண்டர்கள் புகுந்து... Read more »

மகிந்தவுக்கு உடன் பயணத் தடை விதிக்குமாறு அழைப்பு.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு பயணத் தடை விதிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சட்டத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அலரிமாளிகை எதிரில் மற்றும் காலி முகத்திடல் மைதானத்தில் அகிம்சை வழிப் போராட்டக்காரர்கள் மீது கும்பல் தாக்குதலைத் தூண்டியவர்களுக்கு எதிராக இவ்வாறு பயணத்தடை விதிக்க வேண்டும்... Read more »

மகிந்த ராஜபக்சவை உடன் கைது செய்யுங்கள் – தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான தாக்குதல்களில் சிறைக் கைதிகள் பயன்படுத்தப்பட்டதாக குற்றஞ்சாட்டி, சிறைச்சாலைகள் ஆணையாளரை உடனடியாக கைது செய்யுமாறு தொழிற்சங்க கூட்டமைப்பு (TUC) கோரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார். மைனகோகம மற்றும் கோட்டகோகம... Read more »

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ கொழும்பிலிருந்து எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. திருகோணமலையை அண்மித்த தீவு ஒன்றில் ராஜபக்ச குடும்பம் மற்றும் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் தங்கியுள்ளதாக தெரிய வருகிறது. மகிந்த, சமல், பசில் ஆகியோரும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின்... Read more »

காலி முகத்திடல் போராட்டக்காரர்களுடன் இணைந்த இலங்கையின் கிரிக்கெட் ஜாம்பவான்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் ரோஷன் மஹானாமா காலிமுகத்திடல் போராட்டத்தில் நேரடியாக கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்க விரும்பவில்லை. சக... Read more »

தொடரும் வன்முறை சம்பவங்கள் – எரிவாயு லொறிகளுக்கும் தீவைப்பு.

கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் கனக ஹேரத்தின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதன்போது லிட்ரோ எரிவாயு லொறிகள் நிறுத்தப்படும் முற்றத்திற்கும் அடையாளம் தெரியாக சிலர் தீ வைத்துள்ளனர். மேலும், மஹீபால ஹேரத்திற்கு சொந்தமான மூன்று எரிவாயு லொறிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ள... Read more »