
*_꧁. ஆனி: 𝟬𝟮
꧂_*
*_ திங்கள் -கிழமை_
*
*_ 𝟭𝟲•𝟬𝟲•𝟮𝟬𝟮𝟱
_*
*_ ராசி- பலன்கள்
_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_ மேஷம் -ராசி:
_*
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உயர்கல்வியில் நல்ல மாற்றம் உண்டாகும். எதையும் சமாளிக்கும் மனவலிமை ஏற்படும். வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
அஸ்வினி : வாய்ப்புகள் கிடைக்கும்.
பரணி : மாற்றம் உண்டாகும்.
கிருத்திகை : சேமிப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ ரிஷபம் – ராசி:
_*
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். முதலீடு தொடர்பான விஷயங்களில் சந்தை நிலவரங்களை அறிந்து முடிவெடுக்கவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். தனிப்பட்ட திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பொழுதுபோக்கு செயல்களால் விரயம் ஏற்படும். சுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
கிருத்திகை : அனுபவம் வெளிப்படும்.
ரோகிணி : மதிப்பு உயரும்.
மிருகசீரிஷம் : விரயம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மிதுனம்- ராசி:
_*
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான புதிய தேடல்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் நிறம்.
மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கடகம் – ராசி:
_*
சிந்தனைகளில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் இடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய தொழில்நுட்ப கருவிகளில் கவனம் வேண்டும். கணிதம் தொடர்பான துறைகளில் அலட்சியமின்றி செயல்படவும். ஒப்பந்த பணிகளில் தாமதம் ஏற்படும். வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். சிறு சிறு விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
பூசம் : தாமதம் ஏற்படும்.
ஆயில்யம் : விமர்சனங்கள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ சிம்மம் – ராசி:
_*
திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். தந்திரமான சில விஷயங்களால் லாபத்தை உண்டாக்குவீர்கள். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். சமூகம் தொடர்பான புதிய கண்ணோட்டம் உண்டாகும். சகோதரர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
பூரம் : அனுபவம் உண்டாகும்.
உத்திரம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கன்னி – ராசி:
_*
உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். திடீர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் பிரச்சனைகள் குறையும். குழந்தைகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில் சார்ந்த முயற்சிகள் கைகூடும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகளில் நிதானம் வேண்டும். சிக்கல்கள் விலகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
உத்திரம் : பொறுப்புகள் மேம்படும்.
அஸ்தம் : பிரச்சனைகள் குறையும்.
சித்திரை : நிதானம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ துலாம் – ராசி:
_*
உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பிறமொழி மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். இன்னல்கள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
சித்திரை : குழப்பங்கள் விலகும்.
சுவாதி : விவேகத்துடன் செயல்படவும்.
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ விருச்சிகம் – ராசி:
_*
நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பயணங்களால் புதிய அத்தியாயம் பிறக்கும். புதிய வேலைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். வியாபாரத்தில் சில சலுகைகள் மூலம் லாபத்தை மேம்படுத்துவீர்கள். சமூகப் பணிகளில் உயர்வு உண்டாகும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
விசாகம் : தாமதம் உண்டாகும்.
அனுஷம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
கேட்டை : உயர்வு உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ தனுசு – ராசி:
_*
செலவுகளை சமாளிப்பதற்கான சூழல் அமையும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து செயல்படவும். உயர் பொறுப்புக்கள் மூலம் மதிப்பு உயரும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். தந்தையின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பாகப்பிரிவினை பிரச்சனைகள் குறையும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு நிறம்.
மூலம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
பூராடம் : அனுபவங்கள் மேம்படும்.
உத்திராடம் : தேடல்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மகரம் – ராசி:
_*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்துவதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகளால் திருப்தி ஏற்படும். பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
உத்திராடம் : கலகலப்பான நாள்.
திருவோணம் : ஆதாயம் அடைவீர்கள்.
அவிட்டம் : அனுகூலம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ கும்பம் – ராசி:
_*
சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். சில பணிகளை திட்டமிட்டு மேற்கொள்வது நன்மையை தரும். மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
அவிட்டம் : ஆதரவான நாள்.
சதயம் : சிந்தித்து செயல்படவும்.
பூரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_ மீனம் – ராசி:
_*
நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். ஜாமீன் விஷயங்களை தவிர்க்கவும். ரகசியமான முதலீடுகள் அதிகரிக்கும். வெளியூர் சார்ந்த பயண வாய்ப்புகள் மேம்படும். மனதளவில் ஒருவிதமான தடுமாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களால் பொறுப்புகள் மேம்படும். எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். அலுவலகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
பூரட்டாதி : அலைச்சல் ஏற்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் மேம்படும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
*┈┉┅━•• ••━┅┉┈*