கிண்ணியாவில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய இருவர் கைது,

 கிண்ணியாவில் முச்சக்கர வண்டியொன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெட்ரோலும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த... Read more »

நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கை ஆதரவு – சீனா அறிவிப்பு

சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக கம்போடியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார். 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் கம்போடியா சென்றுள்ளார். சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில்,... Read more »

எச்சரிக்கையை மீறிய அமெரிக்கா – தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்த சீனா.

சீன விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்கள் தாக்குதல் நடத்த ஒத்திகை பார்த்ததாக தைவான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தைவான் பாதுகாப்பு அமைச்சகம் இதனை குறிப்பிட்டுள்ளது. சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு விஜயம் செய்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்பு மற்றும் காலநிலை... Read more »

ஆய்வுக் கப்பல் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் கோரிக்கை!

இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மேலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான, விண்வெளி-செயற்கைக்கோள் கண்காணிப்பு கப்பலான யுவான் வாங் 5 பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசாங்கம், சீன அரசாங்கத்திடம் கோரியுள்ளது. இந்த செய்தியை இந்திய ஊடகமான ஹிந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த உளவுக் கப்பல் ஆகஸ்ட்... Read more »

சுகாதார அமைச்சு வெளியிட்ட எச்சரிக்கை!

அதிகளவான சிறுவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. டெங்கு மற்றும் கோவிட் – 19 நோய்த் தொற்று காரணமாக இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான சிறுவர் சிறுமியர் டெங்கு காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாக... Read more »

மகளை கண்டித்த தந்தையை, தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில்!

யாழ் உரும்பிராய் கிழக்கில் மகளை கண்டித்த தந்தையை, தாய் தாக்கியதில் காயமடைந்த தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.. மகள் தொலைபேசியில் அதிக நேரத்தை செலவிடுவதாக தந்தை கண்டித்துள்ளதுடன், மகளிடமிருந்த தொலைபேசியை வாங்கிய தந்தை அதிலிருக்கும் விடயங்களை பார்வையிட்டுள்ளார். இதனால் உருவான... Read more »

கொட்டகலையில் மண்சரிவு : மூன்று வீடு சேதம், 16 பேர் பாதிப்பு.

கொட்டகலை ஸ்டோனிகிளிப் தோட்டம் தகரமலை பிரிவில் நெடுங்குடியிருப்பில் உள்ள மண்மேடு பெய்த மழை காரணமாக சரிந்து விழுந்துள்ளது. இதனால் மூன்று வீடுகளில் உள்ள சுவர்கள் இடிந்து விழுந்துள்ளதுடன், சமயலறையிலிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமாகியுள்ளன. அத்தோடு குடியிருப்பு பகுதிகளில் வெடிப்புகளும் ஏற்பட்டுள்ளன. வீட்டுக்குள் நீர் வருவதாகவும்... Read more »

இலங்கை வருவதனை தவிர்க்கும் சுற்றுலா பயணிகள்!

இலங்கைக்கு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஊக்குவிப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தையாக... Read more »

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் அறிவிப்பு!

நாட்டைக் கட்டியெழுப்புவதே அனைவரினதும் பொதுவான இலக்காகும் எனவும் அதற்காக தமது தனிப்பட்ட இலாப எதிர்பார்ப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றிணைய வேண்டும் எனவும் இது வெறும் பதவிப் பரிமாற்றமாக இருக்காது குழு அமைப்பு மூலம் நாட்டைக் கட்டியெழுப்புவதில் முனைப்பாக பங்களிப்பை வழங்கக்ககூடிய ஒன்றாக இருக்க வேண்டும்... Read more »

கொழும்பு, கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டு படுகொலை

கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொன்றி தேட்டம் பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்ட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். வத்தளை ஹூனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் காயமடைந்தவரை... Read more »