கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொன்றி தேட்டம் பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் பொல்லினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்ட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை ஹூனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 76 வயது நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பிரேதப் பரிசோதனைக்காக தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.