நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கை ஆதரவு – சீனா அறிவிப்பு

சர்வதேச மாநாட்டில் பங்கேற்பதற்காக கம்போடியா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பல நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் கலந்துரையாடியுள்ளார். 29வது ஆசியான் பிராந்திய மன்றத்தின் அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அவர் கம்போடியா சென்றுள்ளார்.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில், கடன் நெருக்கடியில் இருந்து விடுபட இலங்கைக்கு ஆதரவளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை மீட்பதற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாயாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை ஜப்பான் தொடர்ந்து வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க இராஜாங்க செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பொன்றும் இடம்பெற்றது.

இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விஷயங்கள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews