தம்புள்ளை கொட்டாவெல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் நேற்று (04) இரவு இடம்பெற்றுள்ளது. கொட்டாவெல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதான கீதா குமாரி கருணாதிலக என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்... Read more »
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வு பெறும் அரச ஊழியர்களின் எண்ணிக்கை 20,000ஐ தாண்டும் என உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே.மாயாதுன்னே தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின்... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது பொருத்தமானதல்ல.அவரை நிம்மதியாக ஓய்வெடுக்க விடுங்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,”நாட்டில் மீண்டுமொரு கொந்தளிப்பு... Read more »
2022ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைக்களுக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறித்த பரீட்சைக்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை... Read more »
இலங்கை அரச பயங்கரவாதம் செயற்படும் நாடாக இருப்பதால் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் இலங்கைக்கு பணம் அனுப்புவதை தவிர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இந்த அரச பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரையில் ஒரு சதத்தைக் கூட இந்த நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களிடம்... Read more »
வெளிநாட்டிலுள்ள இலங்கை பணியாளர்கள் மின்சார வாகனம் ஒன்றை இறக்குமதி செய்வதற்கான விண்ணப்ப படிவத்தினை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு வெளியிட்டிருக்கின்றது. மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளடங்கிய சுற்றறிக்கையை அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது. சுற்றறிக்கையின்படி, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஒரு மின்சார வாகனம்,... Read more »
இலங்கையில் ஒரு நாளில் 12 மார்பகப் புற்றுநோயாளர்கள் இனம் காணப்படுவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் வைத்திய நிபுணரும் சார்க் நாடுகளின் புற்றுநோயாளர் சங்கத் தலைவருமான கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்தார். இலங்கையில் புற்று நோய் அதிகரித்துவருவது தொடர்பில் அவரிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்,... Read more »
யாழ்.தொண்டைமாற்றில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளமையினால் செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நீராடும் பகுதியை சூழ இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகி இடம்பெற்று வரும் நிலையில் அதிகளவு பக்தர்கள் முருகப்பெருமானை... Read more »
யாழ்.மாநகரின் மத்தியில் கழிவு நீர் வடிகானுக்கு மேல் ஏற்பட்டிருக்கும் பாரிய குழியினால் பொதுமக்கள் சிரமங்களை எதிர் கொண்டிவருகின்றனர். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக உள்ள ஞானவைரவர் ஆலய வீதியில் வீதியின் நடுவே கழிவு நீர்செல்லும் வாய்க்கால் ஒன்றில் பாரிய குழி ஏற்பட்டுள்ளதால் யாழ் நகரில்... Read more »
யாழ்.நகரில் 3 துவிச்சக்கர வண்டிகளை திருடிய இருவர் தீவகம் – நாரந்தனையில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மத்திய பேருந்து நிலையம், யாழ்போதனாவைத்தியசாலை, குருநகர் சின்னகடை சந்தை ஆகிய பகுதிகளில் சைக்கிள்களை திருடிய இருவர் நாராந்தனை பகுதியில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 37... Read more »