ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிப்பு!

அண்மையில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read more »

எரிபொருள் விநியோகத்துக்கான கியூஆர் பதிவு மீண்டும் ஆரம்பம்!

தேசிய எரிபொருள் கியூஆர் குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் திட்டமிடப்பட்ட பராமரிப்பு காரணமாக கடந்த 48 மணிநேரத்தில் அந்த சேவை முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் புதிய... Read more »

50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு ஐஓசி திட்டம்.

நாடளாவிய ரீதியில் 50 மேலதிக எரிபொருள் நிரப்பு நிலையங்களை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக லங்கா ஐஓசி நிறுவனம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு லங்கா ஐஓசி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இதனை அறிவித்துள்ளார். இதேவேளை, நாடளாவிய ரீதியாக வாடகை வாகனங்களுக்காக கிவ்.ஆர் குறியீட்டு முறைமையொன்றை அறிமுகப்படுத்தி... Read more »

அரச அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு.

அரச அடக்குமுறையை நிறுத்து, எதிர்க்கின்ற உரிமையை உறுதிப்படுத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வை கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று (8) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாதிரியார்கள் உள்ளிட்ட சர்வமதத் தலைவர்கள், அருட்சகோதரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சர்மதத் தலைவர்கள்... Read more »

களஞ்சியசாலையை உடைத்து 52 சிலின்டர்கள் திருட்டு. 6 பேர் கொண்ட கும்பல் கைது…..!

யாழ்.ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு களஞ்சியத்தை உடைத்து அங்கிருந்த சுமார் 52 வெற்று சிலின்டர்களை திருடிய குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் உட்பட 6 பேர் பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.  கடந்த சில நாள்களுக்கு முன் ஓட்டுமடம் பகுதியில் உள்ள லாப்ஸ் சமையல் எரிவாயு... Read more »

சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கி சூடு..!

சிகை அலங்கரிப்பு நிலையத்திற்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 22 வயதான இளைஞன் எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடாதவர் எனவும் துப்பாக்கிதாரியின் இலக்கு தவறியே இளைஞன் உயிரிழந்திருக்கலாம். எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். உடுகம்பொல வல்பொல பிரதேசத்தில் அழகு கலை நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில்... Read more »

சாரதியின் கவனக்குறைவால் பேருந்திலிருந்து விழுந்த மாணவி! தப்பி ஓடிய பேருந்தை மடக்கி பிடித்தவர்கள் கைது,

கவன குறைவால் பாடசாலை மாணவியை விபத்திற்குள்ளாக்கிய இ.போ.ச பேருந்தையும் அதன் சாரதியையும் விடுவித்த பொலிஸார் விபத்தில் காயமடைந்த சிறமியின் சகோதரர் உட்பட இருவரை பேருந்து மீது தாக்குதல் நடத்தியதாக கூறி கைது செய்துள்ளனர்.  குறித்த சம்பவம் நேற்று காலை 7.45 மணியளவில் முரசுமோட்டை பகுதியில்... Read more »

யாழ்ப்பாணம் – கொழும்பு பேருந்து கட்டணம் உச்சம்! ஆளுநரின் கவனத்திற்கு….!

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையே போக்குவரத்தில் ஈடுபடும் சொகுசு, அரைச்சொகுசு பேருந்துகள் அதிகளவான பஸ் கட்டணங்களை அறவிடுவத தொடர்பாக ஆளுநர் ஜீவன் தியாகராஜாவின் கவனத்திற்கு சொன்ற நிலையில் அதிக கட்டணம் அறவிடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். என ஆளுநர் கூறியுள்ளார்.  சாதாரண பொதுமக்கள்,... Read more »

காதல் விவகாரம்! பொலிஸ் நிலையத்திற்குள் கத்திக்குத்து, ஒருவர் பலி.. |

பொலிஸ் நிலையத்திற்குள் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 53 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவிசாவளை கரவனெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாகவும், கொலயைச் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட தகராறு... Read more »

அரச வங்கியில் 6 கோடியே 83 லட்சம் மோசடி! வங்கி முகாமையாளரான பெண் கைது!

அரச வங்கி ஒன்றில் சுமார் 68 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி... Read more »