சந்தேக நபர்களை கைது செய்து காவல் நிலையம் திரும்பிய காவல்துறையினர் மீது தாக்குதல்..!

ஆனமடுவ- கொட்டுகச்சி பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. சந்தேக நபர்களை கைது செய்து விட்டு காவல் நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொட்டுக்கச்சி- பூரணாகம பகுதியில் வீதியை... Read more »

ரணிலின் செயற்பாட்டினால் மகிழ்ச்சியில் நாமல்

வன்முறைக்கு அடக்குமுறையே ஒரே பதில் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச செய்யாததை ஜனாதிபதி ரணில் அமுல்படுத்தியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார். “அடக்குமுறையை ஏவாவிட்டால் இந்த நாட்டில் ஒழுக்கம் நிலைநாட்டப்படமாட்டாது. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதை... Read more »

அடுத்த வருடத்திற்கான ஆட்சேர்ப்பு முடக்கம்! அரச நிறுவனங்களுக்கு முக்கிய உத்தரவு

அடுத்த வருடத்திற்கான பொதுத்துறை ஆட்சேர்ப்பு முடக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அறிவித்துள்ளது. அரசாங்கத்தின் வருவாய் சேகரிப்பு மற்றும் பெருகிவரும் செலவுகளில் குறிப்பிடத்தக்க குறைப்பே இந்த முடிவிற்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. சுற்றறிக்கை ஒன்றின் மூலம், புதிய அலுவலக உபகரணங்களை கொள்வனவு செய்யக் கூடாது என்றும் அரச நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.... Read more »

இலங்கைக்கு மேலும் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா..! வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலரை மேலதிக உதவியாக வழங்கவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் உறுதியளித்துள்ளார். சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடி... Read more »

உலக சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பு

தங்கம் விலையானது பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் உலக சந்தையில் ஏற்றத்தில் காணப்படுகின்றது. ஐரோப்பிய மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில் தங்க விலை உயர்வினை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலரின் மதிப்பானது 20 ஆண்டுகால உச்சமான 110.78ல் இருந்து 108.945 ஆக சரிவினைக் கண்டுள்ளமையானது... Read more »

மகிந்தவின் அடுத்தகட்ட திட்டம் அம்பலம்!

காலி முகத்திடல் போராட்டக்காரர்களை இணைத்துக் கொண்டு அரசியல் மாற்றம் செய்வது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதற்கமைய, போராட்டக்காரர்களுடன் கலந்துரையாடி, முடிந்தால் அந்த போராட்டக்காரர்களை தமது கட்சியுடன் இணைத்துக் கொள்வது தொடர்பில்... Read more »

தமிழ் அரசியல் கைதிகளை காண சிறைச்சாலைக்கு பயணமான உறவுகள்!

நீண்டகாலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அரசியல் கைதிகளின் உறவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு மகசின் சிறைச்சாலைக்குசர்வதேச கவனமொன்றை ஈர்த்துக் கொள்ளும் வகையில் பயணத்தை மேற்கொண்டனர். குரலற்றவர்களின் குரல் அமைப்பு யாழ் ஊடக அமையத்தில் நேற்று மதியம் 2மணியளவில் நடாத்திய... Read more »

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு அடையாள போராட்டம் யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமானது.. |

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி 25 மாவட்டங்களிலும் பொதுமக்களின் கையெழுத்து பெறும் அடையாள ஊர்திவழி போராட்டம் நேற்று காலை யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ளது. காலை 10 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி கோயிலிலிருந்து சிதறு தேங்காய் உடைக்கப்பட்டு ஆரம்பமான குறித்த ஊர்திவழிப் போராட்டம் காங்கேசன்துறை தொடக்கம் 25 மாவட்டங்களுக்கும்... Read more »

இலங்கையை வந்தடைந்தார் சமந்தா பவர்..!

சர்வதேச அபிவிருத்திக்கான அமொிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இன்று காலை இலங்கையை வந்தடைந்துள்ளார். இரு நாள் உத்தியோகபூர்வ பயணமாக அவர் இலங்கையை வந்தடைந்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் இலங்கையின் நெருக்கடி நிலை தொடர்பிலும் அமெரிக்காவின் பங்களிப்புத் தொடர்பிலும் அவருடைய பயணத்தின் போது ஆராயப்படும்... Read more »

வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்பு! பொலிஸார் தீவிர விசாரணை.. |

வீடொன்றிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். பதுளை – ஹிங்குருகமுவ பகுதியில் உள்ள வீடொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 55 மற்றும் 83 வயதுடைய இருவரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த மரணங்கள் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்த... Read more »