சந்தேக நபர்களை கைது செய்து காவல் நிலையம் திரும்பிய காவல்துறையினர் மீது தாக்குதல்..!

ஆனமடுவ- கொட்டுகச்சி பிரதேசத்தில் நேற்று மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

சந்தேக நபர்களை கைது செய்து விட்டு காவல் நிலையத்துக்கு திரும்பிக் கொண்டிருந்த போதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டுக்கச்சி- பூரணாகம பகுதியில் வீதியை மறித்த இனந்தெரியாதோர் இரும்பு மற்றும் மரக்கட்டைகளால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தநிலையில் தாக்குதலில் ஈடுபட்ட 6 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, புத்தளம் பிரிவு போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட மூவர் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

About the Author: admin