இலங்கைக்கு மேலும் டொலர்களை வழங்குகிறது அமெரிக்கா..! வெளியான அறிவிப்பு

இலங்கைக்கு மேலும் 40 மில்லியன் அமெரிக்க டொலரை மேலதிக உதவியாக வழங்கவுள்ளதாக சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் உறுதியளித்துள்ளார்.

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகத்தின் நிர்வாகி சமந்தா பவர் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடி மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை மேம்படுத்துவது குறித்து அவர் தனது இந்த விஜயத்தில் ஆராயவுள்ளார்.

இந்நிலையில், ஜா எல சென்ற சமந்தா பவர், அங்குள்ள விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

இதன்போது, விவசாயிகள் தமக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் சமந்த பவரிடம் விளக்கமளித்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டின் விவசாயிகளின் தேவை கருதி உரம் மற்றும் விவசாய உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக, மேலதிக உதவியாக 40 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை வழங்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கை வந்துள்ள சமந்தா பவர் அரசாங்கத்தின் உயர்மட்ட பிரமுகர்களுடன் அவர் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளார்.

இலங்கையின் மனித உரிமைகள் குறித்த முன்னேற்றம், முன்நகர்வுகள், நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில், இலங்கை அதிகாரிகளுடன் சமந்தா பவர் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin