மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும் , சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் ஆனநந்த சங்கரி சந்திப்பு.

பத்மஸ்ரீ கமலஹாசனின் மக்கள் நீதி மய்ய மாநில பிரிவு செயலாளரும் , சட்டத்தரணியுமான எம்.ஸ்ரீதர் இன்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகத்தை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பு நேற்று காலை கிளிநொச்சியில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டணி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, சமகால... Read more »

ஜப்பான் வாகன விவகாரம் எனக்கு தொடர்பில்லை ஆணையாளர் தான் கடிதம் எழுதினார்.. முதல்வர் மணிவண்ணன் தெரிவிப்பு.

கழிவகற்றல் வாகனங்களுக்கான இறக்குமதிக்கான செலவு நிதியை மீளப் பொறுப்பேற்றுமாறு  இப்போதைய பதில் முதல்வர் ஈசன் காலத்தில் யாழ் மாநகர ஆணையாளர் ஜப்பான் தூதரகத்துக்கு எழுத்த மூலம் கடிதம் எழுதினார் என யாழ் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார். நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்... Read more »

வெளிநாடு செல்பவர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் வெளிநாடுகளில் வேலை பார்க்கும் நோக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதன்படி இந்த ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காகப் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை (08) 241,034 ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.... Read more »

புலம்பெயர்ந்தோரால் இலங்கைக்கு கிடைத்துள்ள பெருந்தொகை டொலர்:மத்திய வங்கி தகவல்

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு தொடர்பான தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. கடந்த செப்டெம்பர் மாதத்தின் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 3.6 வீதம் அதிகரித்து 1,717 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அண்மைய தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆகஸ்டில்... Read more »

பேரழிவு இறப்புக்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையின் குடிமக்கள் பெரும்பாலான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களைப் பெறுவதற்கான அணுகலை இழந்துள்ளனர். இதனால் அவர்கள் மனிதாபிமான பேரழிவுக்கான பாதையில் உள்ளனர் என்று இலாப நோக்கற்ற மனிதாபிமான அமைப்பான டிரெக்ட் ரிலீப்(Direct Relief ) எச்சரித்துள்ளது. பிரதம மந்திரி தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பைத் தொடர்ந்து,... Read more »

ரஷ்ய படைகளிடமிருந்து மீட்கப்பட்ட இலங்கையர்கள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

கிழக்கு உக்ரேனில் ரஷ்யர்களால் பிடிக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறிய ஏழு குடிமக்களுக்கு இலங்கை அரசாங்கம் இன்னும் பலவற்றைச் செய்ய வேண்டும் என்றும், அவர்களை பொறுப்பேற்க வேண்டும் என்றும் கொழும்பை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் குழு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த மாதம் உக்ரேனியப் படைகள்... Read more »

பல்லாயிரம் பக்தர்கள் புடை சூழ வல்லிபுரத்து ஆழ்வாருக்கு நேற்று சமுத்திரத் தீர்த்தம்…..!

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய சமுத்திர தீத்த உற்சவம் நேற்று பிற்பகல் 5:00 மணியளவில் கற்கோவளம் சமுத்திரத்தில் இடம் பெற்றது வல்லிபுர ஆழ்வார் ஆலய வசந்த லண்டப பூசைகள் மதியம் 3:00 மணியளவில் ஆரம்பகமாகி 3:45 மணியளவில் வசந்த மண்டபத்திலிருந்து... Read more »

வடமாகாணத்தில் 12ம் திகதிவரை கனமழை தொடரும்! யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா.. |

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி விரிவடைவதால் வடமாகாணத்தின் பல பகுதிகளில் கனமழை செய்யும் வாப்புள்ளதாக யாழ்.பல்கலைகழக விரிவுரையாளர் நா.பிரதீபராஜா கூறியுள்ளார். நேற்று முன்தினம் 8ம் திகதி தொடக்கம் 12ம் திகதிவரை இந்த கனமழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் எனவும் அவர் தொிவித்திருக்கின்றார் Read more »

777 போதை மாத்திரைகளுடன் பெண் கைது, கஞ்சாவும் மீட்பு.. |

யாழ்ப்பாணத்திலிருந்து கைக் குழந்தையுடன் பேருந்தில் பயணித்த பெண் ஒருவரிடமிருந்து கஞ்சா மற்றும் பெருமளவு போதை மாத்திரைகளை மீட்டுள்ள பொலிஸார், குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து புல்மோட்டைக்கு பயணித்த பேருந்தில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து தருமபுரம் பொலிஸார் பேருந்தை சோதனையிட்டபோது... Read more »

பாடசாலைகள் இன்று வழமைபோல் இயங்கும்…..! கல்வி அமைச்சு.

இன்றைய தினம் 10/10/2022ம் திகதி விசேட விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் பாடசாலைகள் வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.  எனவே சகல பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளரை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. அதேநேரம்... Read more »