யாழ்.மாவட்டத்தில் 20 வயது தொடக்கம் 30 வயது வரையானோருக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் இன்று தொடங்கப்படவுள்ளதாக சுகாதார பிரிவினர் தொிவித்துள்ளனர். இதன்படி கீழ் இணைக்கப்பட்டிருக்கும் அட்டவணை பிரகாரம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுகாதார பிரிவு அறிவித்திருக்கின்றது. Read more »
யாழ்.அரியாலை – பூம்புகார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நபர் ஒருவர் தேங்காய் திருவளையால் அடித்து கொல்லப்பட்ட சம்பவத்தில் உயிரிழந்தவரின் மனைவி உட்பட இருவர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். து.செல்வக்குமார்(வயது32) என்பவர் தேங்காய் திருவளையால் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தில்... Read more »
ஜெனிவாவில் உள்ள ஐ.நா முன்றலில் ஈழத்தமிழர்கள் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை தற்போது மேற்கொண்டு வருகின்றனர். 48ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. சுவிட்சர்லாந்து நாட்டின் பல... Read more »
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (20) அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. நேற்று இரவு திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் தனது மனைவியின் வீட்டுக்கு வந்திருந்த நிலையில் முச்சக்கரவண்டியில் இன்று காலை... Read more »
வெலிக்கடை சிறைச்சாலையின் கைதிகள் 10 பேர் சிறைச்சாலையின் கூரையின் மீதேறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைதண்டனையை குறைக்குமாறு கோரியே கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Read more »
யாழ்ப்பாணம் குற்றத் தடுப்புப் பொலிஸாரினால் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாளுடன் நேற்றிரவு நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த நால்வரை சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து 2 தசம் 94 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் வாள், கார்... Read more »
– 45 ஆண்கள், 48 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 68 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 93 மரணங்கள் நேற்று (19) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »
தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது பிரசவத்திற்காக யாழ் போதனா மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயர் உயிரிழந்துள்ளார். இந்த சம்வம் 19.09.21 நேற்று இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்துவந்த 27 அகவையுடைய துசி என்று அழைக்கப்படும் அஜந்தன்... Read more »
யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 27 உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக Tab மற்றும் அதற்குரிய மாத கட்டணவசதி என்பன stanly college சர்வதேச பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள... Read more »
வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்றையதினம் வீடு திரும்பினார். இவருக்கு கடந்த செப்டம்பர் 11ம் திகதி கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கோப்பாய் தனிமைப்படுத்தல் முகாமில் 10 நாட்களாக சிகிச்சை... Read more »