ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் பதவியேற்றார்

ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் பதவியேற்றார்

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்காக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸ நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில், ஜயந்த கெட்டகொட தனது தேசியப்பட்டியல் உறுப்புரிமையை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews