கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அதிபர் ஆசிரியர்கள் போராட்டம்.

கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக அதிபர் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று பகல் 2 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெற்றது. நாடளாவிய ரீதியில் அதிபர் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் இன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.... Read more »

இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்கள் தொடர்பில் பருத்தித்துறை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு.

இலங்கை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களையும் யாழ்ப்பணம் சிறைக்கு மாற்ற பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில் இருந்து கடந்த 11ஆம் தேதி மீன்பிடிக்க இலங்கை கடற்பரப்பிற்க்குள் வந்த வேளை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அகத்தியன்,சிவராஜ்,... Read more »

வடமராட்சி கிழக்கு மாமுனை இளம் குடும்பஸ்தர் பளையில் சடலமாக மீட்பு….!

வடமராட்சி கிழக்கு மாமுனையை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஆறுமுகம் ஞானக்குமார் எனும் 38 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு இத்தாவில் பளை பகுதியில் உறவினரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது நேற்றைய தினம் தனது சகோதரியின் வீரத்திற்கு சென்றவர்... Read more »

சுதந்திர தமிழீழத்தை உருவாக்க விரும்பினால் அதற்கும் நாங்கள் தயார்- எம்.கே.சிவாஜிலிங்கம் சூழுரை.(video)

தனி நாடு, சுதந்திர தமிழீழத்தை உருவாக்க விரும்பினால் அதற்கும் நாங்கள் தயாராகவே உள்ளோம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.   வடமராட்சியில் அவரது அலுவகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் மரக்கன்றுகள் வழங்கல்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் சமுர்த்தி பயணாளிகள் குடும்பங்களுக்கு மரக்கன்றுகள் இன்று வழங்கிவைக்கப்பட்டன. சமுர்த்தி குடும்பங்களுக்கு தேசிய வீட்டுத்தோட்ட அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மா மரக்கன்றுகள் மாதுளை,தோடை, எழுமிச்சை.போன்ற கண்றுகள் 187 பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டன. காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் யு.உதயஸ்ரீதர் தலைமையில்... Read more »

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் கல்விச் சேவையை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு.

திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் முன்னாள் கல்விப் பணிப்பாளரும் தற்போதய கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருமான நகுலேஸ்வரி புள்ளநாயகத்தின் கல்விச் சேவையினை பாராட்டி திருக்கோவில் வலயக் கல்வி அதிகாரியால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். நிகழ்வு திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் வலயக் கல்விப்... Read more »

இன்று இந்த அரசாங்கமானது, நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளது- மரிக்கார் எம்.பி.

இன்று இந்த அரசாங்கமானது, நாட்டு மக்களை படுகுழிக்குள் தள்ளியுள்ளதுடன் வரிசையில் நிக்கும் நிலைமையையும் ஏற்படுத்தியுள்ளது என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) ஊடகங்களுக்குக் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சியில், நாட்டின் பொருளாதாரம்... Read more »

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நாளை வவுனியாவில் போராட்டம்!

வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்றலில் அரசுக்கு எதிராக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மதவாச்சி பிரதேசத்தைச்சேர்ந்த 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரதேசத்துடன் இணைக்கும் செயற்பாட்டினை இரகசியமாக அரசு அரங்கேற்றி... Read more »

யாழில் கடற்கரையை அண்டிய பகுதியில் வசிப்போருக்கு அறிவிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் வசிப்போர் மிகவும் அவதானமாக செயற்படுமாறு யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது தற்போது நிலைகொண்டுள்ள தாழமுக்கத்தின் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் காறறின் வேகமானது 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என... Read more »

யாழ் மாநகர சபை உறுப்பினரிடம் ஐந்து மணிநேரம் விசாரணை!

மாநகர கண்காணிப்பாளர்களின் சீருடை யாருடைய அனுமதியில் அறிமுகப்படுத்தப்பட்டது? யார் அறிமுகப்படுத்தினார்கள் ? சீருடைக்கு ஏன் இந்த நிறம் தெரிவு செய்யப்பட்டு இருந்தது போன்ற பல கேள்விகள் தன்னிடம் விசாரணையின் போது கேட்கப்பட்டதாக யாழ் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபன் தெரிவித்தார். யாழ் மாநகரில் தண்டப்பணம்... Read more »