பன்முகப்படுத்தப்பட்ட பாராளுமன்ற நிதியிலிருந்து மாமுனை கலைமகள் முன்பள்ளிக்கு ரூபா 50000/- பெறுமதியான தளபாடங்கள் வழங்கி வைப்பு….!

பாராளுமன்ற உறுப்பினர் சி.வீ.விக்கினேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்ட பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா 50000/- பெறுமதியான மரத் தளபாடங்கள் இன்று காலை 10:30 மணிக்கு வடமராட்சி கிழக்கு மாமுனை கலைமகள் முன்பள்ளிக்கு வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ் மக்கள் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் சார்பில் அதன் பங்காளி கட்சியான தமிழ் மக்கள் கட்சி செயலாளர் நாயகமும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம் கே சிவாஜிலிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தளபாடங்களை வழங்கி வைத்தார்.
இதில் மாமுனை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக அதிகாரிகள் முன்பள்ளி நிர்வாகம் என பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews