மட்டக்களப்பை நோக்கி மாபெரும் மக்கள் போராட்டம்: பொலிஸார் குவிப்பு.

அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு நகரை நோக்கி மாபெரும் மக்கள் போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக கோஷமெழுப்பியபடி பெரும் திரளான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மட்டக்களப்பு நகரில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நாடளாவிய ரீதியில் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டங்கள் வலுப்பெற்ற பின்னணியில் போராட்டத்தினை... Read more »

அரசில் இருந்து வெளியேறுகிறது சுதந்திர கட்சி.

அரசில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி விலகுவதற்கு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட  முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதன் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, லசந்த அலகியவன்ன, துமிந்த திசாநாயக்க, பிரியங்கர... Read more »

அரசுக்கு எதிராக கொழும்பில் இடம்பெற்ற மற்றுமொரு ஆர்ப்பாட்டம்.

நாட்டில் இடம்பெற்று வரும் அசாதாராண சூழ்நிலைக்கு காரணமான கோட்டாபய அரசின்  ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்  தற்போது கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. Read more »

சமலின் வீடும் சுற்றிவளைப்பு!

திஸ்ஸமஹாராமவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷவின் வீட்டையும் இன்று ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். திஸ்ஸமஹாராம – தெபரவெவ சந்தியிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக சமல் ராஜபக்ஷவின் வீட்டை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, சமல் ராஜபக்ஷவின் வீட்டிற்கு செல்லும் வீதி அடைக்கப்பட்டு யாரும் உள்ளே செல்ல... Read more »

போராட்டத்தில் கலந்து கொள்ள முயற்சித்த பௌத்த தேரரரை ஆத்திரமடைந்து விரட்டிய பொதுமக்கள்.

பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்ட ஜனசெத பெரமுனவின் தலைவர்  பத்தரமுல்லே சீலரதன தேரரை கலந்து கொண்ட  ஆர்ப்பாட்டக்காரர்கள் திருப்பி அனுப்பியுள்ளனர். பத்தரமுல்லே சீலரதன தேரர்,  பொதுமக்கள்  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்திற்கு வருகைத் தந்த வேளை அவர் மீது ஆத்திரமடைந்த மக்கள்... Read more »

அமெரிக்காவில் உள்ள கோட்டாபயவின் மகனது இல்லத்தின் முன்னால் போராட்டம்! உடன் தந்தையை அழைக்குமாறு தெரிவிப்பு.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஒரு சிறிய குழுவாக அங்கு கூடியதாக கூறப்படுகிறது. எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் மகனை அவரது தந்தையை வீட்டிற்கு அழைத்து வருமாறு அழைப்பு... Read more »

நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனை.

நாடு முழுவதும் நிலவும் நெருக்கடியான நிலைமை மேலும் மோசமடைந்தால், நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்புள்ளதால், உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்க சில தரப்பினர் தீர்மானித்துள்ளனர். இடைக்கால அரசாங்கம், தேசிய அரசாங்கம் அல்லது கூட்டு அரசாங்கம் என எதுவும் ஏற்பட்டுள்ள... Read more »

என் பிள்ளைகள் பட்டினியாக உள்ளனர்! தொலைபேசி கம்பத்தில் ஏறி நின்று கூச்சலிடும் நபர்.

பொகவந்தலாவ பகுதியில் உள்ள தொலைபேசி கம்பத்தில் நபர் ஒருவர் ஏறி நின்று தற்போது போராட்டம் மேற்கொண்டு வருகின்றார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் விலைவாசி உயர்வால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும்,... Read more »

அரசாங்கத்திற்கு எதிராக வத்தளை பகுதியில் ஆர்பாட்டம்…!

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து கொழும்பு – வத்தளை பகுதியில் தற்சமயம் அரசுக்கு  எதிரான ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளபட்டுள்ளது என எமது அலவலக செய்தியாளர் தெரிவித்துள்ளார். இப் போராட்டத்தில் பொதுமக்கள் பலர்  பங்கேற்று  அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு... Read more »

உக்ரைனில் ரஸ்யாவின் போர்க்குற்றம்! ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை அவசரமாக கூட்டுமாறு ரஸ்யா கோரிக்கை! –

உக்ரைன் தலைநகர் கியேவுக்கு அருகிலுள்ள புச்சா நகரத்தில் ரஸ்ய படைகளால் போர்க்குற்றம் புரியப்பட்டுள்ளதாக வெளியான குற்றச்சாட்டுக்களை அடுத்து ரஸ்யா, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக்கூட்டத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது. ரஸ்யா, உக்ரைனில் ஆக்கிரமிப்பு போரை ஆரம்பித்ததன் பின்னர், அடிக்கடி ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின்... Read more »