நாடாளுமன்றத்தை கலைக்கும் யோசனை.

நாடு முழுவதும் நிலவும் நெருக்கடியான நிலைமை மேலும் மோசமடைந்தால், நாடு மிகவும் மோசமான நிலைக்கு செல்லும் வாய்ப்புள்ளதால், உடனடியாக நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்களை கொடுக்க சில தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

இடைக்கால அரசாங்கம், தேசிய அரசாங்கம் அல்லது கூட்டு அரசாங்கம் என எதுவும் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு தீர்வாக அமையாது என்பதால், தற்காலிக அமைச்சரவை ஒன்றை நியமித்து, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்களின் விருப்ப கையெழுத்துடன் நாடாளுமன்றத்தை கலைக்குமாறு ஜனாதிபதிக்கு யோசனையை முன்வைப்பதே இந்த சந்தர்ப்பத்தில் எடுக்க கூடிய பொருத்தமான முடிவு கட்சிகளின் தலைவர்கள் கருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள்,சமையல் எரிவாயு, மருந்து போன்ற அத்தியவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் மின்சாரமும் அடிக்கடி துண்டிக்கப்படுவதால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நெருக்கடிகள் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தும் நிலைமைக்கு கொண்டு சென்றுள்ளது. இதன் காரணமாக உடனடியான நடவடிக்கைகளை எடுத்து நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு ஆளும் தரப்புக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews