ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி இந்நாட்டு மக்கள் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிக்கின்றார்: எதிர்க்கட்சித் தலைவர்.

ராஜபக்சர்களை பாதுகாப்பதற்காக தற்போதைய ஜனாதிபதி கூட இந்நாட்டு மக்களை அடக்கி ஒடுக்கி வருகின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு நூலக மன்றக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நெருக்கடிகளுக்கு மத்தியில்,... Read more »

வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது.

களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

பண்டாரவளை நகரசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட ஒருவர் கைது.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி, பண்டாரவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பண்டாரவளை நகரசபை தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டள்ளார். பண்டாரவளை பிரதேசத்தை சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில், பண்டாரவளை பொலிஸார்... Read more »

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தருமாறு நபரொருவர் கோரிக்கை.

மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் குடும்பத்தாருடன் கடிதம் மூலம் தொடர்பில் இருந்து வரும் அஹின்சக என்பவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். மகாராணி இரண்டாம் எலிசபெத்தின்... Read more »

தருமபுரம் நெத்தலியாறு சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா…!

கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நெத்தலியாற்றம் கரைதனில்  அமரந்து  அருள்பாலிக்கும் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா நேற்று 09.09.2022  மிகச் சிறப்பான முறையில் சிவாச்சாரியார்கள் வேதபாராயணம் ஓத சுகாதார நடைமுறைகளுக்கு  அமைவாக நடைபெற்றுள்ளது. பக்தர்கள் புடைசூழ இத்திருவிழா இடம் பெற்றது. Read more »

ஹாட்லிக் கல்லூரி மாணவர்களால் இரண்டு இலட்சம் பனம் விதை நடுகை திட்டம் ஆரம்பம்…….!

யாழ்ப்பாணம் வடமராட்சி ஹாட்லிக் கல்லூரியின் 1998  ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர  உயர்தர அணியினரினால் இன்றைய தினம் இரண்டு இலட்சம் பனை விதைகள்  நடும் திட்டம்  வல்லிபுரம் பகுதியில்  இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. புலம் பெயர் மற்றும் உள்ளூர் பழைய மாணவர்களால்... Read more »

அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது…!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 5 வது நாளாகவும்  உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை..! உளநல வைத்தியர் சிவதாஸ்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சம் பேருக்கு 34 பேர் வரையில் தற்கொலை செய்து கொள்கின்றனர் எனகடந்த ஆய்வுகளில் இனங்கான ப்பட்டுடிருப்பதாக யாழ் போதனா வைத்திய சாலையின் உளநல வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார். உலக தற்கொலை தடுப்பு தின நிகழ்வு (10-09-2022) இன்று கிளிநொச்சி மாவட்ட... Read more »

வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் உதவியுடன் உலருணவுப்பொதி வழங்கிவைப்பு…!

“வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின் நிறுவுனர் அமல்ராஜ் ஏற்பாட்டில் தொழிலின் நிமித்தம் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர் அமைப்பான “வணக்கம் வாழ்க தமிழ்” அமைப்பின்  உதவியுடன் உலருணவுப் பொதிகள் இன்று (10.09.2022) தர்மபுரம். கனகாம்பிகைக்குளம். பொன்னகர். செல்வபுரம்  ஆகிய பகுதிகளில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 30... Read more »

வவுனியா பொது வைத்தியசாலை திருட்டு சம்பவம் சந்தேக நபர் கைது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்ர சிகிச்சைக் கூடத்தில்  கடந்த இடம் பெற்ற திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் அறியக்கிக்கிடைத்ததாவது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை தொகுதியில் பொருட்கள் காணாமல்... Read more »