வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைது.

களுத்துறை புளத்சிங்கள பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வேல்கம பிரதேசத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 40 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது குறித்த நபர் நான்கு வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவ்வாறு கொள்ளையடித்து பெற்றுக்கொண்ட பணத்தின் மூலம் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்துள்ளமை தெரியவந்துள்ளது.இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews