யாழ்.உடுப்பிட்டியில் குழு சண்டை ஊர் சண்டையாக மாறியது..! இராணுவத்தை அழைத்த பொலிஸார், இராணுவ குவிப்பால் பதற்றம்.. |

யாழ்.உடுப்பிட்டியில் இரு குழுக்களுக்கிடையில் உருவான தர்க்கம் ஊர் சண்டையாக மாறிய நிலையில் பொலிஸாரின் கோரிக்கைக்கு அமைவாக படையினர் கிராமத்தை சுற்றிவளைத்து அமைதியை கொண்டுவர முயற்சிப்பதாக கூறப்படுகின்றது. உடுப்பிட்டி பிரதேசத்தில் இலகடி – வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்த தோட்டம் பகுதிகளை சேர்ந்த சண்டியர்களுக்கிடையில் தர்க்கம்... Read more »

யாழ்.மாவட்டத்தில் 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தை சேர்ந்த 41 பேர் உட்பட வடக்கில் 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலையில் 249 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 75 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர். யாழ்.மாவட்டத்தில் 41 பேருக்கு தொற்று.  யாழ்.போதனா... Read more »

பருத்தித்துறையில் பிறந்து 2 நாட்களான சிசுவுக்கு கொரோனா…!

யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து 2 நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் குழந்தைக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உள்ளமை... Read more »

கர்ப்பம் தரிப்பதை ஒரு வருடத்திற்கேனும் பிற்போடுமாறு சுகாதார மேம்பாட்டுப் பணியகம்….!

நாட்டின் தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு ஏற்கனவே குழந்தைகளையுடைய தாய்மார் கர்ப்பம் தரித்தலை ஒரு வருடத்திற்கேனும் பிற்போட வேண்டும் என்று அறிவுறுத்துவதாகவும் விசேட வைத்திய நிபுணர் ஹர்ஷ அத்தபத்து தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த... Read more »

கனகராயன் குள விபத்தில் இருவர் பலி!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது. கப் வாகனத்தில்... Read more »

யாழில் கார் – ஹைஏஸ் மோதி விபத்து…. !

யாழ்ப்பாணம் – வேம்படி வீதி முதலாம் குறுக்குத்தெரு சந்தியில் இன்று பகல் இடம்பெற்ற விபத்தில் காரொன்று பலத்த சேதமடைந்துள்ளதுடன் காரில் பயணித்தவர் அதிஸ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். ஹைஏஸ் வாகனமொன்றும், காரொன்றும் மோதி விபத்திற்குள்ளாகின. இதில் யாருக்கும் பெரும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை.  ஆனால், கார்... Read more »

வக்சினே சரணம்……! ஆய்வாளர் நிலாந்தன்.

“அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே கொரோனா வைரஸ் நிலைமை மோசமடைவதற்கு காரணம்.கொரோனாவிற்கு எதிரான போராட்டத்திற்கு மருத்துவ நிபுணர்கள் தலைமை தாங்கவேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான எரான் விக்கிரமரட்ண.எனது கடந்த வாரக்கட்டுரையில் நான் குவிமையப்படுத்திய விடயமும் இதுதான்.“இலங்கை ஒரு சிறியதீவு... Read more »

வரணி பிரதேச வைத்திய சாலை ஆண் பெண் விடுதிக்கு அடிக்கல் நாட்டுவிழா…!

வரணி பிரதேச வைத்திய சாலைக்கான ஆண் பெண் விடுதி மற்றும் மகப்பேற்று மனைக்கான  அடிக்கல் நாட்டுவிழா இன்று  அதன் பொறுப்பு மருத்துவ அதிகாரி பசுபதி அச்சுதன் தலமையில் இடம் பெற்றது. உலக சுகாதார நிறுவனத்தின்  pssp திட்டத்தின்  கீழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்... Read more »

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் கடல் பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம்:

ராமேஸ்வரம் செப் 08, மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தொடர்ந்து வீசிவரும் சூறைக்காற்று காரணமாக ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அனுமதி அளிக்கப்படாத நிலையில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகம் கடற்பகுதி திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். ராமேஸ்வரத்தில் சுமார்... Read more »

மன்னார் எண்ணெய், எரிவாயு மூலம் நாட்டின் கடனில் மும்மடங்கு வருமானம் ஈட்ட முடியும் |

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில– 267 பில்லியன் டொலர் பெறுமதி மன்னார் கடற்பரப்பிலுள்ள 267 பில்லியன் டொலர் பெறுமதியான எண்ணெய் மற்றும் எரிவாயு வளத்தினால் நாட்டின் மொத்த கடன் தொகையை போன்று மூன்று மடங்கு வருமானம் ஈட்ட முடியும் என வலுசக்தி அமைச்சர் உதய... Read more »