102 ஆண்கள் உள்ளிட்ட மேலும் 185 பேர் மரணம்!

நாட்டில் மேலும் 185 பேர் கொரோனா வைரஸ் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 689 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் உயிரிழந்த 185 பேரில் 83 பெண்களும், 102 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews