தனமல்வில ஹம்பெகமுவ வீதியின் ஹெந்தகோண பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இருவர் காயமடைந்தனர்.
முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவித்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.