கனகராயன் குள விபத்தில் இருவர் பலி!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (08) இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்நோக்கி சென்றுகொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது.

கப் வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் சம்பவ இடத்தில் மரணமடைந்திருந்தார். அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மரணமடைந்திருந்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews