மாநகரசபை வரவுசெலவு திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் செயற்படமாட்டார்கள்! மாநகர முதல்வர் கருத்து.. |

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. என யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில். வரவு செலவுத் திட்ட தயாரிப்பின்போது அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்ளடக்கியே... Read more »

கொடிகாமம் – கச்சாயில் பாலியல் தொந்தரவு! சந்தேகநரை தேடும் பொலிஸார்.. |

யாழ்.கொடிகாமம் – கச்சாய் பகுதியில் வசித்துவரும் குடும்ப பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த குடும்ப பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்தவேளை அயல் வீட்டிலிருந்த குடும்ப தலைவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று முரண்பட்டுள்ளார். பின்னர்... Read more »

அமெரிக்காவை பின்பற்றும் அவுஸ்திரேலியா! சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்.

ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், சின்ஜியாங்கில் நடந்துகொண்டிருக்கும்... Read more »

தேசத்தை காப்பாற்றியவருக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை! பிபின் ராவத்தை இறுதியாக பார்த்த நபர் வெளியிட்ட தகவல்.

இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன்போது இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான போது அதிலிருந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தை கடைசியாக உயிருடன் பார்த்ததாகவும், அவர் பேசியதை கேட்டதாகவும்... Read more »

புத்தாண்டில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கவுள்ள இலங்கை! நிபுணர்கள் எச்சரிக்கை.

எதிர்வரும் 2022 ஆம் ஆண்டில் கடும் பொருளாதார நெருக்கடியை இலங்கை எதிர்நோக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளதாக  நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தமது கடன் தவணைகளை சரியான முறையில் செலுத்த முடியாத நிலை உருவாகும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரிய ட்விட்டர்... Read more »

கொழும்பில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்.

கொழும்பு வீதிகளில் மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்து வண்டி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கமைய, முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போதெல்லாம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு... Read more »

சுவிட்சர்லாந்தில் இலங்கை தமிழர் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து! சிக்கித் தவிக்கும் ஆண்கள்.

வெளிநாட்டில் இருக்கக் கூடிய தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன என சுவிட்சர்லாந்தில் பேர்ன் மாநிலத்தில் வாழ்ந்து வரும் சமூக சேவையாளரும் ஆசிரியருமான முருகவேல் நந்தினி தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.... Read more »

ஒரு அகதியின் குமுறல்……

ஓராண்டுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டு, அவுஸ்திரேலியா குடிவரவுத் தடுப்பிலிருந்து வெளியே வந்த பொழுது என்னை வரவேற்பதற்காக மக்கள் காத்திருந்தனர். தடுப்பு மையத்திலிருந்து வெளியே நடந்து வந்த பொழுது, “வணக்கம் தனுஷ்” என்றனர். கடந்த எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக அப்போதே தான் பெயர் சொல்லி... Read more »

இலவச மருத்துவ முகாம் நேற்று கண்டாவளையில்.

மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டு நிறுவனத்தின் நிதி அனுசரையுடன், வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கிளிநொச்சி மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த இலவச மருத்துவ முகாம் நேற்று கண்டாவளையில் இடம்பெற்றது. நேற்று காலை 9 மணியளவில் ஆரம்மான குறித்த மருத்துவ முகாம் தர்மபுரம்... Read more »

பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்தில்.

பெண்களுக்கெதிரான வன்முறை இல்லாது ஒழிக்கும் 16 நாள் வேலைத்திட்டத்தின் கண்டாவளை பிரதேசத்திற்கான நிறைவு நிகழ்வு  நேற்று இடம்பெற்றது. பெண்கள் வாழ்வுரிமை கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட குறித்த வேலைத்திட்டம் கரைச்சி. கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் இடம்பெற்றது. பெண்களிற்கு எதிரான வன்முறையிலிருந்து பாதுகாத்தல் மற்றும் விழிப்புணர்வூட்டும் வகையில்... Read more »