மாநகரசபை வரவுசெலவு திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் செயற்படமாட்டார்கள்! மாநகர முதல்வர் கருத்து.. |

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. என யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில். வரவு செலவுத் திட்ட தயாரிப்பின்போது அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்ளடக்கியே தயாரித்து இருக்கின்றோம்.

ஆகவே அவர்களுடைய கோரிக்கைகளை உள்ளடக்கிய வரவு செலவுத்திட்டத்தை அவர்களே தோற்கடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை.

யாழ்.மாநகர சபையில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளின் தலைமைகளிடமும் மாநகர சபையில் முன்வைக்கப்படுகின்ற வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

என நான் பகிரங்கமாகவும் அன்பாகவும் ஒரு கோரிக்கையை விடுக்கின்றேன். மாநகர சபை வரவு செலவு திட்டத்தை தோற்கடிக்கும் முகமாக கட்சித்தலைவர்கள் செயற்படமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews