கொழும்பில் விரைவில் ஏற்படவுள்ள மாற்றம்.

கொழும்பு வீதிகளில் மின்சாரத்தால் இயக்கப்படும் பேருந்து வண்டி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.இதற்கமைய, முதலில் குறுந்தூர போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாகன இறக்குமதி மீதான தடை நீக்கப்படும் போதெல்லாம் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 2022ஆம் ஆண்டில் வாகன இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்படமாட்டாது என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews