கோப்பாயில் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கிய குற்றச்சாட்டில் ஐவர் கைது!

நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால்... Read more »

75 வீத நன்கொடைக்காக வடக்கு தீவுகள் இந்தியாவுக்கு – அமைச்சர் டக்ளஸ்!

இந்தியா வழங்கும் 75 வீத நன்கொடைக்காக வடக்கின் மூன்று தீவுகள் வழங்கப்படவுள்ளன என்று கடற்றொழில் அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கான முன்னாய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். இதன்போது,... Read more »

மின்பிறப்பாக்கி பழுது இருளில் மூழ்கியது சாவகச்சேரி வைத்தியசாலை!

மின்வெட்டு நேரம் ஆதார வைத்தியசாலையில் பொருத்தப்பட்ட மின்பிறப்பாக்கி பழுதடைந்தமையால் வைத்தியசாலை முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது நாட்டில் நேர அட்டவணையின் பிரகாரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படுகிறது. இவ்வாறான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்ட நிலையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த... Read more »

ஏப்ரல் 7இல் நாடு முழுவதும் 150 போராட்டங்களை நடத்த எதிர்க்கட்சி முடிவு!

அரசாங்கத்துக்கு எதிராக ஒரே நாளில் – ஒரே நேரத்தில் 150 போராட்டங்களை நாடு தழுவிய ரீதியில் நடத்துவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் 7 ஆம் திகதி தேர்தல் தொகுதிகள் வாரியாக குறித்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. ஐக்கிய மக்கள்... Read more »

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும்  பிரேரணைகள் பருத்தித்துறை பிரதேச சபையில் நிறைவேற்றம்….!

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஆ.சுரேஸ்குமாரால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரும் பிரேரணை பருத்தித்துறை பிரதேச சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத தடை சட்டம் தமிழ் மக்களை மட்டுமல்ல அனைவரையும் பாதிக்கின்ற ஒரு மோசமான சட்டமாகும். இந்த சட்டத்தை நீக்குமாறு கோரிய... Read more »

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்து எந்தவித குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாதவர்களை விடுதலை செய்யுமாறு கோரும் பிரேரணை சாவகச்சேரி பிரதேச சபையில் நிறைவேற்றம்….!

பயங்கரவாத தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, எவ்வித ஆதாரங்களும் இல்லாமல் பலர் தடுத்து வைக்கப் பட்டுள்ளார்கள். அவர்களை உரிய தரப்பினர் பிணையிலோ, அல்லது விடுதலை செய்யுமாறு கோரும் பிரேரணையை சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ் நேற்று முன்தினம்  சமர்ப்பித்துள்ள நிலையில் குறித்த... Read more »

தொடர் மின்தடை காரணமாக பலரது  வாழ்வாதாரங்கள் பாதிப்பு….!

கிளிநொச்சி மாவட்டத்தில் மின்தடை காரணமாக பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மற்றும்  மின் ஒட்டுத்தொழிலாளர்கள்,  குளிர்பான விற்பனையாளர்கள், என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில்  தையல் தொழிலை நம்பியே தமது வாழ்வாதாரமாக மேற்கொண்டுவரும்  நிலையில் தற்போது தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு அதன் காரணமாக தமது தையல்... Read more »

ஈபிடீபி மற்றும் பெரமுன, ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்த முன்னணியின் மூன்று உறுப்பினர்கள்….!

பருத்தித்துறை பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மூன்று உறுப்பினர்கள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியுடன் இணைந்துள்ளனர். திரு தர்சன், திருமதி கவிதா சித்திராதரன்,திரு.ஜெயபாலன் ஆகிய மூன்று உறுப்பினர்களும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியில் நேற்று இணைந்துள்ளனர். நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச... Read more »

முறிகண்டியில் விபத்து ஒருவர் பலி, மூவர் படுகாயம்….!

முல்லைத்தீவு முறிகண்டி பகுதியில் ஏற்பட்டவிபத்து சம்பவத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கழிவகற்றும் உழவு  இயந்திரத்தின் பின் பகுதியில் அதே திசையில் பயணித்த சொகுசு பேருந்து மோதி சாரதி சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன் மேலும்... Read more »

இந்திய மீனவர்கள் தமது கடலில் மீன்பிடிக்க நாம் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும்…..! வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் கா. அண்ணாமலை ஆவேசம்.

இந்திய மீனவர்கள் தமது கடலில் மீன்பிடிக்க நாம் ஏன் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என வடமாகாண கடற்றொழிலாளர் இணைய தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் நேற்று நடாத்திய ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவித்ததாவது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னவர்... Read more »