தொடர் மின்தடை காரணமாக பலரது  வாழ்வாதாரங்கள் பாதிப்பு….!

கிளிநொச்சி மாவட்டத்தில்
மின்தடை காரணமாக பல பெண் தலைமைத்துவ குடும்பங்கள், மற்றும்  மின் ஒட்டுத்தொழிலாளர்கள்,  குளிர்பான விற்பனையாளர்கள், என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில்  தையல் தொழிலை நம்பியே தமது வாழ்வாதாரமாக மேற்கொண்டுவரும்  நிலையில் தற்போது தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு அதன் காரணமாக தமது தையல் தொழிலை முன்னெடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் முன்னைய காலங்களில் மின்சாரம்  அற்ற  தையல் இயந்திரத்தின் மூலமாக   உடுபுடவைகள்  தையல் தொழிலை மேற் கொண்டதாகவும்,  தற்போது மின்சாரத்தினால் பயன்படுத்துகின்ற தையல் இயந்திரத்தை தாங்கள் பயன்படுத்துவதாகவும்,  இதன் மூலம் கூடிய வருமானம் பெறக்கூடிய நிலை இருந்ததாகவும், தற்போது நாளாந்த  வாழ்வாதார பொருட்கள் அனைத்தும் இருமடங்கு மும்மடங்கு என பல மடங்கு விலை அதிகரித்துள்ள நிலையில் அதை பெறுவதற்கும் இரண்டு நாட்கள் மூன்று நாட்கள் அலைந்து திரியவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மின்சாரம் அடிக்கடி தடை படுவதன் காரணமாக தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில்  உடுபுடவைகளை தைத்து  வழங்கமுடியாத நிலை வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்துச் செல்லவும்,  எமது குடும்ப நிலையை கருத்தில் கொண்டும் மின்சாரத்தினை தொடர்ச்சியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,  பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.  இல்லை எனின் தாம் வேறு தொழிலுக்குச் செல்லவேண்டிய நிலை ஏற்படும் எனவும், அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews